Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/கருங்குளம் யூனியனில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம்

கருங்குளம் யூனியனில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம்

கருங்குளம் யூனியனில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம்

கருங்குளம் யூனியனில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம்

ADDED : அக் 08, 2011 01:48 AM


Google News

செய்துங்கநல்லூர் : கருங்குளம் யூனியன் இந்த தேர்தலில் வாக்காளர்களுக்கு முன்கூட்டியே பணம் வழங்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பேசிக் கொள்கின்றனர்.பொதுவாக ஒருவர் தேர்தலில் வேட்பு மனு தாக்கலின் போது அல்லது அதன் பின் தான் வாக்காளர்களை கவர்வது வழக்கம்.

ஆனால் இந்த உள்ளாட்சித் தேர்தலில் தேர்தல் அறிவிப்பு வந்த உடனேயே வாக்காளர்களுக்கு பணம், டாஸ்மாக் அயிட்டம் மற்றும் பிரியாணி பொட்டலம் வழங்கப்பட்டுவிட்டதாம். வேட்புமனு தாக்கலுக்கு முன்பே இது வழங்கப்பட்டு தொடர்ந்து கடைப்பிடிக்கப்படுகிறதாம். ஒரு சில பஞ்.,களில் இப்படிப்பட்ட சம்பவம் நடந்துள்ளதால் எதிர் அணியில் உள்ளவர்கள் வாக்காளர்களை கவர்வது கஷ்டமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். சில யூனியன் வார்டு தொகுதிகளில் அரசியல் கட்சி சின்னங்கள் வரையப்பட்டு பெயர்களும் சுவர்களில் எழுதப்பட்டுவிட்டது. அரசியல் கட்சிகளுக்கிடையே ஒதுக்கீடு, ஒப்பந்தங்கள் அதன்பின் கட்சியின் டிக்கட் பெறுவது சம்பந்தமான வேலைகள் நடக்கும் முன்பே பெயர் மற்றும் கட்சி சின்னங்களுடன் சுவர் விளம்பரம் எழுதப்பட்டுவிட்டது.கருங்குளம் யூனியன் 14வது வார்டில் திமுக.,வேட்பாளர் கணேசன் தேர்தல் அறிவிப்பு வந்ததும் இந்த சுவர் விளம்பரத்தை எழுதிவிட்டாராம். அதில் தேர்தல் தேதி 19 என்றிருப்பதை கடந்த ஒரு வாரமாக அழித்து 17ம் தேதி என்று திருத்தி வருகின்றனர். திமுக.,ஒன்றிய செயலாளருக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதால் டிக்கட் உறுதி என்பதில் இவர் எழுதியதாக தெரிகிறது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us