/உள்ளூர் செய்திகள்/சென்னை/பி.இ., துணை கவுன்சிலிங் இன்று விண்ணப்பிக்கலாம்பி.இ., துணை கவுன்சிலிங் இன்று விண்ணப்பிக்கலாம்
பி.இ., துணை கவுன்சிலிங் இன்று விண்ணப்பிக்கலாம்
பி.இ., துணை கவுன்சிலிங் இன்று விண்ணப்பிக்கலாம்
பி.இ., துணை கவுன்சிலிங் இன்று விண்ணப்பிக்கலாம்
ADDED : ஆக 01, 2011 01:42 AM
சென்னை : பிளஸ் 2 உடனடித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், பி.இ., துணை கவுன்சிலிங்கில் பங்கேற்க இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.
பிளஸ் 2 பொது தேர்வில் தோல்வியடைந்தோருக்காக நடத்தப்பட்ட உடனடித் தேர்வின் முடிவுகள், கடந்த 25ம் தேதி வெளியிடப்பட்டது. இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், வரும் 12ம் தேதி நடக்கும் பி.இ., துணை கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பம், சென்னை அண்ணா பல்கலையில் மட்டும், இன்று முதல் வரும் 5ம் தேதி வரை வழங்கப்படுகிறது. விண்ணப்பத்தை சமர்ப்பிக்க, 5ம் தேதி கடைசி நாள். பொது கவுன்சிலிங் முடிந்தபின், காலியாக உள்ள இடங்களை, 12ம் தேதி நடக்கும் துணை கவுன்சிலிங்கில், விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.அண்ணா பல்கலை இணையதளத்தில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.