Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/கள்ளக்காதல் விவகாரத்தில் பயங்கரம் காடையாம்பட்டி அ.தி.மு.க., பிரமுகர் கொடூரமாக வெட்டிக்கொலை

கள்ளக்காதல் விவகாரத்தில் பயங்கரம் காடையாம்பட்டி அ.தி.மு.க., பிரமுகர் கொடூரமாக வெட்டிக்கொலை

கள்ளக்காதல் விவகாரத்தில் பயங்கரம் காடையாம்பட்டி அ.தி.மு.க., பிரமுகர் கொடூரமாக வெட்டிக்கொலை

கள்ளக்காதல் விவகாரத்தில் பயங்கரம் காடையாம்பட்டி அ.தி.மு.க., பிரமுகர் கொடூரமாக வெட்டிக்கொலை

ADDED : செப் 14, 2011 01:21 AM


Google News
ஓமலூர் : ஓமலூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில், அ.தி.மு.க., பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம், தீவட்டிப்பட்டி அடுத்த காடையாம்பட்டி சந்தைப்பேட்டையை சேர்ந்தவர் கலையரசன் (42). சேலம் மேற்கு மாவட்ட, அ.தி.மு.க., முன்னாள் துணை செயலாளராக இருந்தவர். செங்கல்சூளை அதிபரான இவர், நில புரோக்கராகவும் இருந்தார்.பென்னாகரம் தொகுதியில், 2010 மார்ச்சில் நடந்த இடைத்தேர்தலின் போது, பிரசாரத்துக்கு சென்ற கலையரசன், பாலகோடு பகுதியில் தங்கி உள்ளார். அப்போது, அதே ஊரை சேர்ந்த பூர்ணிமா (35) என்பவருடன், பழக்கம் ஏற்பட்டுள்ளது. திருமணமான பூர்ணிமா, கணவர் ஜெயமணியுடன் வசித்து வந்துள்ளார்.இந்நிலையில், பூர்ணிமாவுடன் அடிக்கடி மொபைல் ஃபோனில் தொடர்பு கொண்டு கலையரசன் பேசியதோடு, இருவரும் தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்துள்ளனர். அதே நேரத்தில், பூர்ணிமாவுக்கும், அதே பகுதியில் வசிக்கும் கோவிந்தராஜ் என்பவருக்கும், ஏழு ஆண்டாக கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.கலையரசனுடன், பூர்ணிமா நெருக்கமாக பழகுவது தெரிந்து, கோவிந்தராஜ் கண்டித்துள்ளார். எனினும், கலையரசன் தொடர்பை பூர்ணிமா கைவிடவில்லை. 15 நாட்களுக்கு முன், கோவிந்தராஜூக்கு தெரியாமல், காடையாம்பட்டி சந்தைபேட்டை, செங்கல்சூளை அருகே, கணவருடன் பூர்ணிமா குடியேறி உள்ளார். இவர்களுக்கு, வாடகைக்கு வீடு எடுத்து, குடும்பம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை கலையரசன் செய்து கொடுத்துள்ளார்.

இதையறிந்த,கோவிந்தராஜ் ஆவேசமடைந்தார். கள்ளக்காதலியை தீர்த்துக்கட்ட முடிவு செய்து, அவரது வீட்டுக்கு நேற்று காலை 11 மணியளவில் சென்றுள்ளார். அப்போது, பூர்ணிமாவுடன் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த கோவிந்தராஜ், கத்தியால் வெட்ட முயன்ற போது, பூர்ணிமா கூச்சல் போட்டு கொண்டு வெளியே தப்பியோடி வந்துள்ளார்.அலறல் சத்தம்கேட்டு, செங்கல்சூளையில் இருந்த கலையரசன், பதட்டத்துடன் அங்கு ஒடி வர, அவரை கத்தியால், சரமாரியாக கோவிந்தராஜ் வெட்டியுள்ளார். இதில், கீழே விழுந்து, ரத்த வெள்ளத்தில் கலையரசன் பலியானார். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த செங்கல்சூளை ஊழியர்கள் கோவிந்தராஜை மடக்கி பிடித்து சரமாரியாக தாக்கினர். இந்த தாக்குதலில் அவருக்கு ரத்தகாயம் ஏற்பட்டது.ஓமலூர் டி.எஸ்.பி., முத்துகருப்பன் தலைமையில் தீவட்டிப்பட்டி இன்ஸ்பெக்டர் பாஸ்கர்பாபு மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பலியான கலையரசன் உடலை மீட்டனர். தாக்குதலில், காயமடைந்த கொலையாளி கோவிந்தராஜை, சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனையில் அனுமதிததனர்.இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்து, பூர்ணிமா, கலையரசனின் மனைவி விஜயா (38) ஆகியோரிடம் தனித்தனியே விசாரணை நடத்தி வருகின்றனர்.டி.எஸ்பி., முத்துகருப்பன் கூறுகையில், ''போலீஸ் பாதுகாப்புடன் சேலம் அரசு மருத்துவமனையில் கோவிந்தராஜூக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சைக்கு பின், அவர் கைது செய்யப்படுவார்,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us