சுறா வேட்டைக்கு தடா! டைட்டானிக் ஹீரோ கோரிக்கை
சுறா வேட்டைக்கு தடா! டைட்டானிக் ஹீரோ கோரிக்கை
சுறா வேட்டைக்கு தடா! டைட்டானிக் ஹீரோ கோரிக்கை
ADDED : செப் 05, 2011 03:55 PM

உலகப்புகழ் டைட்டானிக் திரைப்படத்தின் நாயகன் லியானார்டோ டீ காப்ரியோ
சுறா வேட்டைக்கு எதிராக குரல் கொடுத்துள்ளார். பிராணிகள்
வதைக்கப்படுவதற்கு எதிராக தீவிரமாக பிரசாரம் செய்து வரும் லியானார்டோ,
சுறா மீன்கள் வேட்டையாடப்படுவது தடுக்கப்பட வேண்டும் என
வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சுறா வேட்டைக்கு எதிராக சட்ட
மசோதா ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு ஏகோதிபத்திய
ஆதரவு நல்கியுள்ள டீ கேப்ரியோ, அவரது ரசிகர்கள் அனைவருக்கும் சுறா
வேட்டையில் ஈடுபடக் கூடாது என அன்புக் கட்டளை இட்டுள்ளார்.
ட்விட்டர் சமூக
வலைதளத்தில் ரசிர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார் டீ கேப்ரியோ.
டைட்டானிக் ஹீரோவுக்கும் கடலுக்கும் ஏதோ நெருங்கிய சம்பந்தம் இருந்து கொண்டே இருக்கிறது.


