/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/தென் மண்டல பல்கலைக்கிடையே 3 நாள்கோ-கோபோட்டி துவக்கம்தென் மண்டல பல்கலைக்கிடையே 3 நாள்கோ-கோபோட்டி துவக்கம்
தென் மண்டல பல்கலைக்கிடையே 3 நாள்கோ-கோபோட்டி துவக்கம்
தென் மண்டல பல்கலைக்கிடையே 3 நாள்கோ-கோபோட்டி துவக்கம்
தென் மண்டல பல்கலைக்கிடையே 3 நாள்கோ-கோபோட்டி துவக்கம்
ADDED : செப் 29, 2011 01:44 AM
புதுச்சேரி : தென்மண்டல பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான 3 நாள் 'கோ-கோ' போட்டி நேற்று முன்தினம் துவங்கியது.புதுச்சேரி பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் நேற்றுமுன்தினம் மாலை நடந்த துவக்க விழாவில் பல்கலைக்கழக விளையாட்டு இயக்குனர்(பொறுப்பு) ஜோதி வரவேற்றார்.
பல்கலைக்கழக இயக்குனர் ராமதாஸ் தலைமை தாங்கினார். வருவாய் துறை செயலர் சொல்லொட்டி பிரபாகர், பல்கலைக்கழகப் பதிவாளர் லோகநாதன், நிதித் துறை அதிகாரி ராகவன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். முன்னதாக போட்டியில் அணிகளின் வீராங்கனைகள் பங்கேற்ற அணிவகுப்பு நடந்தது.கோ-கோ போட்டியில் தென்மண்டலங்களான தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 43 பல்கலைக் கழகங்களின் அணிகள் பங்கேற்கின்றன. போட்டிகள் அனைத்தும் 'நாக் அவுட்' மற்றும் 'லீக்' முறையில் நடக்கின்றன. போட்டி ஏற்பாடுகளை உடற்கல்வித்துறை பேராசிரியர்கள், இயக்குனர்கள் செய்திருந்தனர்.உடற் கல்வித்துறை பேராசிரியர் சக்திஞானவேல் நன்றி கூறினார்.போட்டிகள் நாளை 30ம் தேதி வரை நடக்கிறது. வெற்றி பெற்ற அணிக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது.


