/உள்ளூர் செய்திகள்/கடலூர்/பாம்புகள் நடமாட்டம் அச்சத்தில் போலீசார்பாம்புகள் நடமாட்டம் அச்சத்தில் போலீசார்
பாம்புகள் நடமாட்டம் அச்சத்தில் போலீசார்
பாம்புகள் நடமாட்டம் அச்சத்தில் போலீசார்
பாம்புகள் நடமாட்டம் அச்சத்தில் போலீசார்
ADDED : அக் 12, 2011 01:18 AM
சிறுபாக்கம் : சிறுபாக்கம் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் பாம்புகள் நடமாட்டம்
அதிகரித்துள்ளதால் போலீசார் அச்சத்துடன் பணிபுரிந்து வருகின்றனர்.
சிறுபாக்கம் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ்
குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு போலீசார் தங்கள் குடும்பத்துடன் வசித்து
வருகின்றனர். இப்பகுதியைச் சுற்றி விவசாய நிலங்களும், காட்டுப்பகுதிகளும்
அமைந்துள்ளன. தற்போது சில தினங்களாக பெய்து வரும் மழையால் வயல்வெளி மற்றும்
வனப்பகுதிகளில் உள்ள பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் போலீஸ் ஸ்டேஷன்
மற்றும் குடியிருப்பு பகுதியில் அதிகளவில் படையெடுத்து வருகின்றன. இதனால்
போலீசார் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் அச்சத்தில் உள்ளனர். போலீஸ்
ஸ்டேஷனில் பணிபுரியும் போலீசாரும் அச்சத்துடன் பணிபுரியும் நிலை உள்ளது.


