/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ரெடிமேட் கார்மெண்ட்ஸ் வியாபாரிகள் சங்க கூட்டம்ரெடிமேட் கார்மெண்ட்ஸ் வியாபாரிகள் சங்க கூட்டம்
ரெடிமேட் கார்மெண்ட்ஸ் வியாபாரிகள் சங்க கூட்டம்
ரெடிமேட் கார்மெண்ட்ஸ் வியாபாரிகள் சங்க கூட்டம்
ரெடிமேட் கார்மெண்ட்ஸ் வியாபாரிகள் சங்க கூட்டம்
ADDED : அக் 09, 2011 12:29 AM
புதுச்சேரி : புதுச்சேரி ரெடிமேட் கார்மெண்ட்ஸ் டிரேடர்ஸ் அசோசியேஷன் வியாபாரிகளின் அவசர ஆலோசனைக் கூட் டம் செல்லான் நகர் வேல்டு கெஸ்ட் ஹவுசில் நடந்தது.
அசோசியேஷன் தலைவர் ரவிந்திரன் தலைமை தாங்கினார். வர்த்தக சபை பொதுச் செயலாளர் குணசேகரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ரெடிமேட் கார்மெண்ட்ஸ் டிரேடர்ஸ் அசோசியேஷன் துணைத் தலைவர் விஜயகுமார், செயலாளர் செல்வக்குமார், இணைச் செயலாளர் கோவிந்தராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் வெளியூர்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் புதுச்சேரிக்கு வருகை புரிந்து திருமண மண்டபங்கள், பெரிய ஓட்டல்கள், பொது வணிக வளாகங்கள் என பல இடங்களில் தற்காலிகமாக ரெடிமேட் துணி கொண்டு வந்து, எவ்வித செலவுகளும் இல்லாமல் வியாபாரம் செய்து வருமானத்தை எடுத்து செல்வதைத் தடுத்து நிறுத்த வேண்டும். உள்ளுர் வியாபாரிகளின் வியாபாரங்கள் பாதிக்காதபடி அவர்களுக்கு அரசு வழிவகை செய்ய வேண்டும். வெளியூர் வியாபாரிகளுக்கு தற்காலிக கடைகள் அமைக்கும் அனுமதியை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.


