ADDED : அக் 03, 2011 10:56 PM
காளையார்கோவில் : காளையார்கோவில் ரோட்டரி சுப்ரீம் கிளப் சார்பில் மாவட்ட அளவில் மாணவகளுக்கான விளையாட்டு போட்டி நடந்தது.
உதவி ஆளுநர் சாதிக் அலி போட்டியை துவக்கி வைத்தார். சூசையப்பர் பட்டிணம் சகாயராணி பெண்கள் மேல்நிலைப்பள்ளி வாணிஸ்ரீ பேச்சுப் போட்டியில் முதலிடம் பெற்றார். சீகூரணி ஹோலி ஸ்பிரிட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 400 மீட்டரில் முதலிடமும், நீளம் தாண்டுதலில் சுஹி ஜெனிபர் முதலிடமும்,மரக்காத்தூர் நடுநிலைப்பள்ளி தினேஷ்குமார் செஸ் போட்டியில் முதலிடமும், மகேஸ்வரி முதலிடமும் பெற்றனர். சி .எஸ் .ஆர் ., சொர்ணலிங்கம், பட்டைய தலைவர் ஆரோக்கியசாமி, தலைவர் மோகன், செயலாளர் பெஞ்சமின் ஆகியோர் பங்க÷ற்றனர்.


