ADDED : அக் 09, 2011 12:24 AM
மதுராந்தகம் : திருமலை வையாவூர் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவிலில், புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை உற்சவம், கோலாகலமாக நடந்தது.
மதுராந்தகம் அடுத்த திருமலை வையாவூர் கிராமத்தில், பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவில் உள்ளது. தென் திருப்பதி என அழைக்கப்படும் இக்கோவிலில், ஆண்டுதோறும், புரட்டாசி மாதம் பிரம்மோற்சவம் நடைபெறும். கடந்த 30ம் தேதி பிரம்மோற்சவம் துவங்கி,கருடசேவை, தேர் திருவிழா ஆகியவை நடந்தது. நேற்று புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை ஒட்டி, பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடை பெற்றது.
பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு, பெருமாளை வழிபட்டனர்.


