ஆண்டிபட்டி : டி.சுப்புலாபுரம் ஜக்கம்மாள், சீலைக்காரியம்மன், விநாயகர்,
கலுசுலிங்கம், முனீஸ்வரன் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.விக்னேஸ்வர
பூஜையுடன் துவங்கிய யாகசாலை நிகழ்ச்சியில் கோ பூஜை, தனபூஜை, தீபாராதனைகள்
நடந்தது.
இரண்டாம் கால, மூன்றாம் கால யாகசாலை பூஜைகளுக்கு பின் ஜக்கம்மாள்
கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து பரிவார சுவாமிகளுக்கும்
கும்பாபிஷேகம், மகா அபிஷேகம், தீபாராதனை நடந்தது. யாகசாலை பூஜைகளில் தேவார,
திருமுறை பாராயணம் நடந்தது. ஏற்பாடுகளை கும்பாபிஷேக விழாக்குழுவினர்
செய்திருந்தனர்.


