/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/சாத்தூரை முன்னோடி நகராட்சியாக்குவேன் :காங்கிரஸ் வேட்பாளர் டி.சுதா வாக்குறுதிசாத்தூரை முன்னோடி நகராட்சியாக்குவேன் :காங்கிரஸ் வேட்பாளர் டி.சுதா வாக்குறுதி
சாத்தூரை முன்னோடி நகராட்சியாக்குவேன் :காங்கிரஸ் வேட்பாளர் டி.சுதா வாக்குறுதி
சாத்தூரை முன்னோடி நகராட்சியாக்குவேன் :காங்கிரஸ் வேட்பாளர் டி.சுதா வாக்குறுதி
சாத்தூரை முன்னோடி நகராட்சியாக்குவேன் :காங்கிரஸ் வேட்பாளர் டி.சுதா வாக்குறுதி
ADDED : அக் 05, 2011 11:44 PM
சாத்தூர் : ''சாத்தூர் நகராட்சியில் அடிப்படை வசதிகளை உருவாக்கி,பல்வேறு புது திட்டங்களுடன் , முன்னோடி நகராட்சியாக மாற்றி காட்டுவேன்,'' என, காங்கிரஸ் வேட்பாளர் டி.சுதா கூறினார்.
சாத்தூர் நகராட்சி தலைவர் பதவிக்கு, காங்கிரஸ் ஐ.என்.டி.யு.சி., நகரத்தலைவர் டி.தாமோதரன் மனைவி டி.சுதா, காங்கிரஸ் சார்பில்'கை' சின்னத்தில் போட்டியிடுகிறார். தேர்தல் பிரசாரத்தில் ஈடுப்பட்டுள்ள இவர் கூறியதாவது: சாத்தூர் நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் என்னை தேர்ந்தெடுத்தால், நகரில் அடிப்படை வசதிகள் போர்கால அடிப்படையில் நிறைவேற்றப்படும். மத்திய,மாநில அரசுகளின் நிதி உதவிகளை முழுமையாக பெற்று ,சாத்தூர் நகரை முன்னோடி நகராட்சியாக மாற்றுவேன். அண்ணாநகரில் தண்ணீர் வசதியுடன் ஆண்கள், பெண்களுக்கென நவீன சுகாதாரமான கழிப்பறைகள் கட்டப்படும். நகரின் முக்கிய சந்திப்புகளில் உயர் கோபுர மின் விளக்குகள் பொருத்தப்படும். தொழில் மேம்பாட்டுக்காக பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாவை நேரில் சந்தித்து, நகராட்சிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய,மாநில அரசு உதவியை பெற்று நிறைவேற்றுவேன். மேலக்காந்தி நகர் ,குருலிங்காபுரம் பகுதிகளுக்கு புதிய குடி நீர் குழாய்கள் பதித்து ,தண்ணீர் விநியோகம் வழங்கப்படும். காமராஜர் காலத்தில் அமைக்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டத்தை நகர் முழுவதும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுப்பேன்.அனைத்து வார்டு பகுதிகளுக்கும் சுத்தமான பாதுகாக்கப்பட்ட தாமிரபரணி குடிநீர் வழங்கப்படும். தற்போது குடிநீர் கட்டணம்,பாதாளசாக்கடை இணைப்புகளுக்கு உள்ள நகராட்சி கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுப்பேன்.புதிய இணைப்புகளுக்கு வசூலிக்கப்படும் இணைப்பு கட்டணம்,டொபசிட் தொகையை குறைக்க நடவடிக்கை எடுப்பேன். சாத்தூர் -தாயில்பட்டி நான்கு வழிச்சாலை சந்திப்பில் மேம்பாலம் கட்ட மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துவேன். தில்லை நகர்,பெரியார்நகர், அண்ணாநகர்,நடராஜா தியேட்டர் ரோடு, ஆண்டாள்புரம், ஆகிய பகுதியில் இருந்து வரும் சாக்கடை நீர் வைப்பாற்றில் கலப்பதை தடுத்து ,கழிவு நீரேற்று நிலையத்திற்கு செல்ல திட்டம் செயல்படுத்தப்படும். நகரில் பொதுமக்கள் நலன் கருதி சேவை மையம் அமைக்கப்படும். பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் உடனுக்குடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். சாத்தூர் ரயில்வே பீடர் ரோட்டில் போக்குவரத்து நெருக்கடியை தீர்க்க ரயில்வே மேம்பாலம் கட்ட மத்திய, மாநில அரசுகளைவலியுறுத்துவேன். நகரில் அனைத்து வார்டுகளிலும் தரமான சிமென்ட், தார் சாலைகள் அமைக்கப்படும். தெருவிளக்குகள் முறையாக பராமரிக்கப்படும். பஸ்ஸ்டாண்டில் ஒழுகும் கூரைகள் சீரமைக்கப்படும். சேதமடைந்திருக்கும் நகராட்சி பூங்காக்கள் சீரமைக்கப்படும் ,என்றார்


