/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/முன்மாதிரி நகராக்குவேன் : தி.மு.க., வேட்பாளர் நாகையாமுன்மாதிரி நகராக்குவேன் : தி.மு.க., வேட்பாளர் நாகையா
முன்மாதிரி நகராக்குவேன் : தி.மு.க., வேட்பாளர் நாகையா
முன்மாதிரி நகராக்குவேன் : தி.மு.க., வேட்பாளர் நாகையா
முன்மாதிரி நகராக்குவேன் : தி.மு.க., வேட்பாளர் நாகையா
ADDED : அக் 08, 2011 11:15 PM
காரியாபட்டி : ''மல்லாங்கிணரை முன்மாதிரி நகராக மாற்றுவதே லட்சியம்,'' என, மல்லாங்கிணர் பேரூராட்சி தலைவர் பதவிக்கு தி.மு.க.,சார்பில் போட்டியிடும் நாகையா கூறினார்.
பிரசாரத்தில் ஈடுப்பட்ட அவர் கூறியதாவது: கடந்த 5 ஆண்டுகள் தலைவர் பதவியில் இருந்து, 6.50 கோடி திட்ட வளர்ச்சிப் பணிகள் செய்தேன். ரூ. 60 லட்சம் மதிப்பீட்டில் முன்னாள் அமைச்சர் தங்கப்பாண்டியன் நூலகம், எம்.எல்.ஏ., நிதியில் அரசு பள்ளி கலையரங்கம், எஸ்.எஸ்.ஏ., திட்டத்தில் கூடுதல் பள்ளிக்கட்டடம், சுகாதாரத்துறை சார்பில் மருத்துவமனை கட்டடங்கள், தார் சாலைகள், கழிப்பறைகள், சைக்கிள் ஸ்டாண்ட் கட்டப்பட்டது. கட்டபொம்மன் தெருவில் தாமிரபரணி குடிநீர் வழங்க மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்ட நிதி ஒதுக்கப்பட்டது. பேரூராட்சியில் 1965 முதல் வார்டு உறுப்பினர், இரு முறை துணைத் தலைவராக பணியாற்றி உள்ளேன். வெற்றி பெற செய்தால் ஜாதி, மத வேறுபாடின்றி அனைத்து சலுகைகளையும் பெற்று தருவேன். மல்லாங்கிணரை மாவட்டத்திலே முன்மாதிரி நகராக மாற்றுவேன், என்றார்.


