/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/உடன்குடி பகுதியில் அதிமுக., வேட்பாளர் தீவிர பிரசாரம்உடன்குடி பகுதியில் அதிமுக., வேட்பாளர் தீவிர பிரசாரம்
உடன்குடி பகுதியில் அதிமுக., வேட்பாளர் தீவிர பிரசாரம்
உடன்குடி பகுதியில் அதிமுக., வேட்பாளர் தீவிர பிரசாரம்
உடன்குடி பகுதியில் அதிமுக., வேட்பாளர் தீவிர பிரசாரம்
ADDED : அக் 11, 2011 02:19 AM
உடன்குடி : உடன்குடி பஞ்., யூனியன் 5வது வார்டில் போட்டியிடும் அம்மன்
நாராயணன், மாவட்ட கவுன்சிலருக்கு போட்டியிடும் மனோஜ் ஆகியோர் தீவிர வாக்கு
சேகரித்தனர்.
உடன்குடி பஞ்., யூனியன் 5வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு
உடன்குடி ஒன்றிய அதிமுக., செயலாளர் அம்மன் நாராயணன் போட்டியிடுகிறார். இவர்
தனது வார்டுக்குட்பட்ட வெள்ளாளன்விளை, சீர்காட்சி, அம்மன்புரம்,
சாமியார்தோப்பு, ஜே. ஜே.நகர் ஆகிய பகுதிகளில் தீவிரமாக வீடு வீடாகச் சென்று
வாக்கு சேகரித்தார். இவருடன் தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி குழு 1வது
வார்டு அதிமுக., வேட்பாளர் மனோஜ் ஓட்டு சேகரித்தார். இவருடன் வெள்ளா
ளன்விளை பஞ்., கழக செயலாளர் வேல்முருகன், கிளை ச் செயலாளர் துரைராஜ்
மற்றும் ஏராளமான அதிமுக.,வினர் உடன் சென்றனர்.


