/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/இடைநிற்றலை தவிர்க்க ஊக்கத்தொகை 553 மாணவர்களுக்கு பத்திரமாக வழங்கல்இடைநிற்றலை தவிர்க்க ஊக்கத்தொகை 553 மாணவர்களுக்கு பத்திரமாக வழங்கல்
இடைநிற்றலை தவிர்க்க ஊக்கத்தொகை 553 மாணவர்களுக்கு பத்திரமாக வழங்கல்
இடைநிற்றலை தவிர்க்க ஊக்கத்தொகை 553 மாணவர்களுக்கு பத்திரமாக வழங்கல்
இடைநிற்றலை தவிர்க்க ஊக்கத்தொகை 553 மாணவர்களுக்கு பத்திரமாக வழங்கல்
ADDED : செப் 20, 2011 01:18 AM
ஈரோடு: வெள்ளோடு அரசு மேல்நிலைப்பள்ளியில், அரசின் சிறப்பு திட்டமான, எஸ்.எஸ்.எல்.ஸி., ப்ளஸ் 1, ப்ளஸ் 2 மாணவ, மாணவியருக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் விழா நடந்தது.
கலெக்டர் காமராஜ் தலைமை வகித்தார். 553 மாணவ, மாணவியருக்கு சிறப்பு ஊக்கத்தொகை பத்திரத்தை வழங்கி அமைச்சர் ராமலிங்கம் பேசியதாவது: மாணவர்கள் கல்வி வளம் பெற அரசு சார்பில் லேப்டாப் வழங்குகிறது. கல்வியில் இடைநிற்றலை தடுக்க, எஸ்.எஸ்.எல்.ஸி., ப்ளஸ் 1, ப்ளஸ் 2 மாணவ, மாணவியருக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
ஈரோடு மாவட்டத்தில் இந்த நிதியாண்டில் 72 ஆயிரத்து 416 மாணவ, மாணவியருக்கு 10.91 லட்சம் ரூபாய் மதிப்பில் சிறப்பு ஊக்கத்தொகை பத்திரமும், 14 ஆயிரத்து 466 மாணவ, மாணவியருக்கு 20 கோடியே 35 லட்சத்து 51 ஆயிரத்து 86 ரூபாய் மதிப்பில் லேப்டாப்பும் வழங்கப்பட உள்ளது.
இப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.ஸி., படிக்கும் 108 மாணவர், 116 மாணவியருக்கு தலா 1,500 ரூபாய் வீதம் 3.36 லட்சம் ரூபாய், ப்ளஸ் 1 பயிலும் 69 மாணவர், 93 மாணவியருக்கு தலா 1,500 ரூபாய் வீதம் 2.43 லட்சம் ரூபாய், ப்ளஸ் 2வில் 70 மாணவர்கள், 97 மாணவியருக்கு தலா 2,000 ரூபாய் வீதம் 3.34 லட்சம் ரூபாய்க்கு ஊக்கத்தொகை பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். முதன்மை கல்வி அலுவலர் குமார் வரவேற்றார். டி.ஆர்.ஓ., கார்த்திகா, மாவட்ட கல்வி அலுவலர்கள் குமார், மணியம்மாள் ஆகியோர் பங்கேற்றனர். ஆர்.டி.ஓ., சுகுமார் நன்றி கூறினார்.


