/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/இரண்டு மாடு பிடித்து மாநகராட்சி : உரிமையாளர்களுக்கு எச்சரிக்கைஇரண்டு மாடு பிடித்து மாநகராட்சி : உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை
இரண்டு மாடு பிடித்து மாநகராட்சி : உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை
இரண்டு மாடு பிடித்து மாநகராட்சி : உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை
இரண்டு மாடு பிடித்து மாநகராட்சி : உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை
ADDED : ஆக 09, 2011 02:50 AM
கோவை : விபத்து ஏற்படுத்தும் வகையில் சுற்றிய இரண்டு மாடுகளை பிடித்த கோவை மாநகராட்சி, உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை மணியை அடித்துள்ளது.கோவை, மாநகராட்சி அலுவலகம் முன், போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றி திரிந்த இரண்டு மாடுகளை, மாநகராட்சி பணியாளர்கள் நேற்று பிடித்தனர்.
மாநகராட்சி பிராணிகள் வதை தடுப்பு சங்க ஆய்வாளர் பிரரிக்விமலன் கூறியது: மாநகராட்சி கமிஷனரின் உத்தரவின் பேரில், போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றிய இரண்டு மாடுகள் பிடிக்கப்பட்டு,தேவாங்க வண்டி பேட்டையில் கட்டப்பட்டுள்ளது. உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டு, மாடுகள் ஒப்படைக்கப்படும். தற்போது, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.உக்கடம், செல்வபுரம், புலியகுளம், கணபதி, ரத்தினபுரி, வேலாண்டிபாளையம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், போத்தனூர் உள்ளிட்ட இடங்களில் சுற்றித்திரியும் மாடு, ஆடுகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. போக்குவரத்திற்கு இடையூறாக, பொது சுகாதாரம் பாதிக்கும் வகையில் ஆடு, மாடுகளை சுற்றவிடும் உரிமையாளர்களுக்கு, கடுமையான எச்சரிக்கை விடப்படுகிறது, என்றார். மாடு பிடிக்கும் போது, பணியாளர்களுடன் சுகாதார மேற்பார்வையாளர் ஹக்கீம் உடனிருந்தார்.


