Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக., அமோக வெற்றி பெறும் : மாவட்ட செயலாளர் கணிப்பு

உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக., அமோக வெற்றி பெறும் : மாவட்ட செயலாளர் கணிப்பு

உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக., அமோக வெற்றி பெறும் : மாவட்ட செயலாளர் கணிப்பு

உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக., அமோக வெற்றி பெறும் : மாவட்ட செயலாளர் கணிப்பு

ADDED : அக் 11, 2011 02:21 AM


Google News

கடையநல்லூர் : 'நெல்லை மேற்கு மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக சரித்திரம் காணும் வெற்றியை பெறும்' என மாவட்ட செயலாளர் அய்யம்பெருமாள் தெரிவித்தார்.



கடையநல்லூர் யூனியன் திரிகூடபுரம் ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளர் சண்முகசுந்தரி, சொக்கம்பட்டி வேட்பாளர் ஜீவிதா, புன்னையாபுரம் வேட்பாளர் சமுத்திரக்கனி, மாவட்ட கவுன்சிலர் வேட்பாளர் இசக்கியம்மாள், ஊர்மேலழகியான் ஒன்றிய கவுன்சில் வேட்பாளர் செல்வி, நயினாரகரம் வேட்பாளர் சாந்தி ஆகியோரை ஆதரித்து தேமுதிக சார்பில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.



தேமுதிக மேற்கு மாவட்ட செயலாளர் அய்யம்பெருமாள் வேட்பாளர்களுக்கு ஆதரவாக கவுன்சில் பகுதிகளில் வீடு வீடாக சென்று ஓட்டுகளை சேகரித்தார்.

அப்போது வாக்காளர் மத்தியில் அவர் பேசியதாவது:- ''தமிழக மக்கள் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். ஊழலற்ற நிர்வாகத்தை தரக்கூடிய கட்சி தேமுதிகதான் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. பொதுமக்களின் அடிப்படை தேவைகளுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய கட்சி என்றால் அது தேமுதிகதான். கடந்த சட்டசபை தேர்தலில் தேமுதிக அதிகமான ஓட்டுகளை மேற்கு மாவட்டத்தில் பெற்றுள்ளது. உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக வெற்றி வாய்ப்பு சரித்திரம் போற்றக்கூடிய அளவில் அமையும்'' என்றார்.



பிரசாரத்தின் போது கடையநல்லூர் ஒன்றிய தேமுதிக பொறுப்பாளர் திரிகூடபுரம் செந்தில்குமார், சொக்கம்பட்டி வெள்ளத்துரை, வலசை லிங்கம், திரிகூடபுரம் பழனி முருகன் மற்றும் தேமுதிக நிர்வாகிகள், கிளை அமைப்பு நிர்வாகிகள் உடன் சென்றனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us