ADDED : அக் 05, 2011 10:37 PM
ஊட்டி : வடகிழக்கு பருவ மழையின் போது, பொது வினியோக திட்டத்தில்
ஏற்படக்கூடிய இடையூறுகளை தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளதால், பொது வினியோக
திட்டத்தில் ஏற்படக்கூடிய இடையூறுகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை
எடுக்கும் வகையில் அக்டோபர் 1ம் தேதி முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம்
13ம் தேதி வரை கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. மாவட்ட வழங்க
அலுவலகம் 0423- 2441216 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பொது மக்கள்
இந்த திட்டத்தில் ஏற்படும் இடர்பாடுகள் குறித்து உரிய விபரங்களை
தெரிவிக்கலாம்.


