/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/மத்திய அரசுக்கு இணையாக ஓய்வூதியம் தியாகிகள், வாரிசுதாரர் நலச்சங்கம் கோரிக்கைமத்திய அரசுக்கு இணையாக ஓய்வூதியம் தியாகிகள், வாரிசுதாரர் நலச்சங்கம் கோரிக்கை
மத்திய அரசுக்கு இணையாக ஓய்வூதியம் தியாகிகள், வாரிசுதாரர் நலச்சங்கம் கோரிக்கை
மத்திய அரசுக்கு இணையாக ஓய்வூதியம் தியாகிகள், வாரிசுதாரர் நலச்சங்கம் கோரிக்கை
மத்திய அரசுக்கு இணையாக ஓய்வூதியம் தியாகிகள், வாரிசுதாரர் நலச்சங்கம் கோரிக்கை
ADDED : ஆக 17, 2011 01:42 AM
கும்பகோணம்: 'மத்திய அரசு வழங்கும் உதவித் தொகை போலவே மாநில அரசும் தியாகிகளை வேறுபடுத்தாமல் ஒரே உதவித் தொகையாக வழங்க வேண்டும்' என இந்திய சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் வாரிசுதாரர்கள் நலச்சங்கம் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
அச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பஞ்சாபிகேசன் முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது, மத்திய அரசுக்கு இணையாக மாநில அரசும் தியாகிகள் மற்றும் வாரிசு தாரர்களுக்கு ஓய்வூதியத்தை வழங்க வேண்டும். தியாகிகள் இறந்த பிறகு அவரண் மனைவிக்கு மத்திய அரசு வழங்குவது போல் முழு உதவித் தொகையும் வழங்க வேண்டும். வீடு மனை இல்லாத தியாகிகளுக்கு கோவில் மற்றும் அரசு புறம்போக்குகள், அரசு குடியிருப்புகளில் முன்னுரிமை அடிப்படையில் வீடு மற்றும் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். நெல்லை மாவட்டத்தில் வசிக்கும் சுதந்திர போராட்ட தியாகி வாஞ்சிநாதனின் வாரிசு ஹரிகர சுப்பிரமணியன் வசித்து வரும் அரசு குடியிருப்பு மனையை அவரது பெயரிலேயே பட்டா தர வேண்டும். மதுரை மாவட்டத்தில் வீடு, மனை இல்லாமல் கோவில் இடங்களிலும், பிளாட்பார்ம்களில் வசித்து வரும் வ.உ.சி., பேத்தி கனகவள்ளிக்கு அரசு குடியிருப்பு இடங்களில் வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும். சென்னையில் வசித்து வரும் கக்கனுடைய மகன் சத்தியநாதன் வசித்து வரும் அரசு குடியிருப்பு மனையை அவருக்கு சொந்தமாக்கி தர வேண்டும். நாச்சியார்கோயிலில் காணாமல் போன தியாகி கல்யாணசுந்தரத்தை போலீஸார் உடனடியாக கண்டுபிடித்து தர வேண்டும். அரசால் கண்டுகொள்ளாமல் புறக்கணிக்கப்பட்டு வரும் தியாகிகள் மற்றும் வாரிசுகளின் நலனை கருத்தில் கொண்டு தியாகிகளுக்கு தனி நலவாரியம் அமைத்து தர வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.