எண்டோ சல்பானுக்கு தடை : அமைச்சர் அறிவிப்பு
எண்டோ சல்பானுக்கு தடை : அமைச்சர் அறிவிப்பு
எண்டோ சல்பானுக்கு தடை : அமைச்சர் அறிவிப்பு
ADDED : ஆக 17, 2011 12:44 AM

சென்னை : தமிழக சட்டசபையில், மார்க்சிஸ்ட் உறுப்பினர் பாலகிருஷ்ணன் பேசும்போது,'கேரளாவில், எண்டோ சல்பானுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், தமிழகத்திலும் தடை விதிக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மருந்தை, விவசாயத்திற்குப் பயன்படுத்தினால், பெரும் ஆபத்து ஏற்படும்' என்றார். இதற்கு, வேளாண் துறை அமைச்சர் செங்கோட்டையன் பதில் கூறும்போது, 'எண்டோ சல்பானை வைத்துக் கொள்ளவோ, விற்பனை செய்யவோ கூடாது என்று, உத்தரவிட்டுள்ளோம்' என்றார்.