Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/வேலை உறுதி திட்ட பயனாளிகளை வறுமைக்கோடு பட்டியலில் சேர்க்க முடிவு

வேலை உறுதி திட்ட பயனாளிகளை வறுமைக்கோடு பட்டியலில் சேர்க்க முடிவு

வேலை உறுதி திட்ட பயனாளிகளை வறுமைக்கோடு பட்டியலில் சேர்க்க முடிவு

வேலை உறுதி திட்ட பயனாளிகளை வறுமைக்கோடு பட்டியலில் சேர்க்க முடிவு

ADDED : ஆக 11, 2011 10:48 PM


Google News

சிவகங்கை : வேலை உறுதி திட்டத்தில் பணியாற்றும் பயனாளிகளை, வறுமை கோடு பட்டியலுக்கு பரிந்துரை செய்யலாம் என, ஊரக வளர்ச்சி முகமை அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

ஆண்டு வருமானம் ரூ.24 ஆயிரத்திற்கும் குறைவாக உள்ளவர்களை, ஒவ்வொரு ஆண்டும் கணக்கெடுத்து, வறுமைக்கோடு பட்டியலில் சேர்ப்பது வழக்கம். இந்த பட்டியலில் உள்ளவர்கள் மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்களை பெற தகுதி உடையவர்கள். வறுமை கோடு பட்டியல் கடந்த சில ஆண்டுகளாக கணக்கெடுக்கப்படவில்லை. இந்நிலையில், பழைய பட்டியலின் படி பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கப்படுகிறது.வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் பணியாற்றியவர்கள் அனைவரையும் இப்பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம் என மாநில, மத்திய அரசுக்கு ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனரகம் தெரிவித்துள்ளது. ஊரக வளர்ச்சி முகமை அதிகாரி ஒருவர் கூறுகையில்,'' தேசிய வேலை உறுதி திட்டத்தில் பயன் பெற்றவர்களின் பட்டியலின்படி, அவர்களின் வாழ்வாதாரம் குறித்து 20 வகையான வினாக்கள் கேட்கப்பட்டுள்ளது. அதில், அவர்கள் இருப்பிடம் சொந்த வீடா, குடிசை வீடா, வீட்டில் என்னென்ன வசதிகள் செய்யப்பட்டுள்ளது, என்ன வகையான வாகனங்கள் வைத்துள்ளனர். கூலி வேலை மட்டுமே செய்கிறாரா, வியாபாரம் செய்கிறாரா உள்ளிட்ட 20 கேள்விகள் கேட்கப்பட்டு உள்ளது. கேள்விகள் தேசிய வேலை உறுதி திட்டத்தில் பணியாற்றும் பயனாளிகளுக்கு பொருந்தும் என்பதால், இப்பணியில் ஈடுபட்டுள்ளவர்களை வறுமைகோடு பட்டியலில் சேர்க்க என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது, '' என்றார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us