/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/சிறை பிடிக்கப்பட்ட பா.ஜ., வேட்பாளர் : எடுபடவில்லை அ.தி.மு.க., முயற்சிசிறை பிடிக்கப்பட்ட பா.ஜ., வேட்பாளர் : எடுபடவில்லை அ.தி.மு.க., முயற்சி
சிறை பிடிக்கப்பட்ட பா.ஜ., வேட்பாளர் : எடுபடவில்லை அ.தி.மு.க., முயற்சி
சிறை பிடிக்கப்பட்ட பா.ஜ., வேட்பாளர் : எடுபடவில்லை அ.தி.மு.க., முயற்சி
சிறை பிடிக்கப்பட்ட பா.ஜ., வேட்பாளர் : எடுபடவில்லை அ.தி.மு.க., முயற்சி

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சி தலைவர் பதவிக்கு அ.தி.மு.க.,-தி.மு.க., வினரிடையே நேரடிப்போட்டி ஏற்படும் என்ற சூழ்நிலை நிலவியது.
இவர் பரமக்குடியில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கு சேர்மனாக பதவி வகித்து வருகிறார். கடந்த காலங்களில் திராவிடக்கட்சிகள் கவுன்சிலருக்கு போட்டியிட கூட வாய்ப்பளிக்காத நிலையில் பா.ஜ.க., இவரை தலைவர் பதவிக்கு போட்டியிட ஆதரித்துவிட்டதே என்பதை அறிந்த அ.தி.மு.க.,வினர் திகில் அடைந்தனர்.மாவட்ட, நகர அ.தி.மு.க., முக்கியப்புள்ளிகள், வெற்றி பாதிக்கப்படும் என்ற பயத்தில் முருகானந்தம் வீட்டிற்கு சென்று 'வாபஸ்' பெறும்படி மணிக்கணக்கில் வலியுறுத்தினர்.
இதனால் அன்று இரவு 7 மணிக்கு பா.ஜ., தொண்டர்கள் கூட்டம், வேட்பாளர் அறிமுக கூட்டத்திற்கு கூட முருகானந்தம் செல்ல முடியாமல் தவித்தார். இதை எப்படியோ அறிந்த பா.ஜ., துணை பொதுச்செயலாளர் நாகராஜன் பதறிப்போனார். அவரது தலைமையில் கட்சியினர் இரவு 8 மணிக்கு முருகானந்தம் வீட்டிற்கு சென்று அவரை அழைத்து சென்றனர். பின்னர் அடுத்த நாளே அதிரடியாக வேட்பு மனுத்தாக்கல் செய்தார் முருகானந்தம்.


