தளபதி உட்பட மூவருக்கு ஜாமின் மறுப்பு
தளபதி உட்பட மூவருக்கு ஜாமின் மறுப்பு
தளபதி உட்பட மூவருக்கு ஜாமின் மறுப்பு
ADDED : ஆக 02, 2011 01:21 AM
மதுரை : மதுரையில் நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க., நகர செயலாளர் தளபதி உட்பட மூவருக்கு ஜாமின் மறுத்து கோர்ட் உத்தரவிட்டது.
மதுரை திருமங்கலத்தை சேர்ந்த சிவானாண்டி - பாப்பா ஆகியோரது ஐந்து கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஐந்து ஏக்கர் 25 சென்ட் நிலத்தை 40 லட்சம் ரூபாய் கொடுத்து அபகரித்ததாக தளபதி, தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பொட்டு சுரேஷ் (சுரேஷ் பாபு), எஸ்ஸார் கோபி மற்றும் மாணிக்கம் செட்டியார் உட்பட 12 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தனர். தளபதி, பொட்டு சுரேஷ், கொடிசந்திரசேகரன், கிருஷ்ணபாண்டி ஆகியோர் பாளை சிறையில் அடைக்கப்பட்டனர். பொட்டு சுரேஷ் மீது குண்டாஸ் பாய்ந்தது. எஸ்ஸார் கோபி சரணடைந்தார். கோர்ட் உத்தரவுப்படி, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கில் தளபதி, கொடிசந்திரசேகரன், கிருஷ்ணபாண்டி, மாணிக்கம் செட்டியார் ஆகியோர் ஜாமின் கேட்டு மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். மனுதாரர்கள் சார்பில் பிரேம்ராஜ்அம்புரோஸ், மோகன்குமார், லிங்கதுரை, செந்திவேல் ஆஜராயினர். ஜாமின் வழங்க அரசு வக்கீல் எம்.தமிழ்செல்வன் ஆட்சேபம் தெரிவித்தார். நீதிபதி கே.பாஸ்கரன், விசாரணை நடத்தி தளபதி, கொடிசந்திரசேகரன், கிருஷ்ணபாண்டி ஆகியோருக்கு ஜாமின் மறுத்தும், மாணிக்கம் செட்டியாருக்கு ஜாமின் வழங்கியும் உத்தரவிட்டார்.