Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/டீ கடை பெஞ்சு

டீ கடை பெஞ்சு

டீ கடை பெஞ்சு

டீ கடை பெஞ்சு

PUBLISHED ON : ஜூலை 20, 2011 12:00 AM


Google News
Latest Tamil News

போலீஸ் ஸ்டேஷனுக்குள் புகுந்து ரவுடியை மீட்ட எம்.எல்.ஏ.,! ''சினிமாவுல வர்ற மாதிரி, போலீஸ் ஸ்டேஷனுக்குள் புகுந்து அங்கிருந்த ரவுடியை, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., மீட்டுட்டு போயிருக்காரு வே...!'' என, அதிரடி தகவலுடன் பேச ஆரம்பித்தார் பெரியசாமி அண்ணாச்சி.



''விளக்கமா சொல் லுங்க...'' என்றார் அந்தோணிசாமி.



''சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த ஒரு ரவுடியை போலீசார் கைது செஞ்சிருக்காவ...

அந்த ரவுடி, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,வுக்கு ரத்த சொந்தமாம்... அதனால, தகவல் கிடைச்சதும் ஆவேசமான எம்.எல்.ஏ., போலீஸ் நிலையத்திற்குள் புகுந்து, போலீசாரை மிரட்டி ரவுடியை மீட்டுட்டு போயிருக்காரு வே...



''எம்.எல்.ஏ., இப்படின்னா, அவரோட வாரிசுகள், அப்பகுதியில வீடு பிடிச்சு சூதாட்ட கிளப் நடத்திட்டு இருக்காவ... ஏற்கனவே, போலீசில சிக்கி, கோர்ட்டுல தண்டனை வாங்கியிருக்காங்க... 'நாங்க தான் வருங்கால கவுன்சிலர்கள்'ன்னு, வாரிசுகள் ஆட்டம் தாங்க முடியலையாம் வே... அவங்க விரல் அசைவுக்கு லோக்கல் இன்ஸ்பெக்டர், 'டான்ஸ்' ஆடிட்டு இருக்காரு வே...'' என்று விளக்கினார் அண்ணாச்சி.



''ரிடையர் ஆன ஒரு வி.ஏ.ஓ., தமிழக அரசின் இலவச, 'டிவி'க்களை வீடு, வீடா சேல்ஸ் செஞ்சிருக்காரு பா...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார் அன்வர்பாய்.



''என்ன ஓய் சொல் றீர்...'' என, வியப்பாக கேட்டார் குப்பண்ணா.



''ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த ஒரு வி.ஏ.ஓ., தேர்தலுக்கு முன், 'ரிடையர்' ஆகியிருக்காரு பா... பதவிக் காலத்துல, 200 இலவச, 'டிவி'க்களை வாங்கி பதுக்கி வைச்சிருக்கார்... அதை, சில தினங்களுக்கு முன், தி.மு.க.,வினர் உதவியோட வீடு, வீடா, 'சேல்ஸ்' பண்ணிருக்கார்... இந்த விஷயம், ஆளுங்கட்சி பிரமுகர்களுக்கு தெரிஞ்சு, புகார் கொடுத்திருக்காங்க...'' என்றார் அன்வர்பாய்.



''அரசுக்கு எதிரா, 'கேஸ்' போட மறுத்துட்டார் ஓய்...'' என, கடைசி தகவலுக்கு மாறினார் குப்பண்ணா.



''எந்த அதிகாரி வே...'' எனக் கேட்டார் அண்ணாச்சி.



''அரசு ரப்பர் கழகத்தின் தலைவரா பாலநாதன்ங்கற அதிகாரி இருக்கார் ஓய்... இவர், வனத்துறை சேர்மன் பதவியில இருந்தப்ப, எந்த குற்றச்சாட்டுக்கும் ஆளாகாம வேலை பார்த்திருக்கார்... இப்ப, அவரை விட, 'ஜூனியர்' அதிகாரியான, 'கவுதம்டே'ங்கற அதிகாரியை, வனத்துறை சேர்மனா அரசு நியமனம் பண்ணிருக்கு...



''முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் பதவியில இருக்கற நான்கு பேர்ல, பாலநாதன் தான் சீனியராம்... அதனால, வனத்துறை சேர்மன் பதவி நியமனத்தை எதிர்த்து, 'டிரிபியூனல்' கோர்ட்டுல கேஸ் போடுங்கன்னு, சக அதிகாரிகள் பாலநாதன்கிட்ட சொல்லிருக்கா... அதுக்கு, 'அதெல்லாம் ஒண்ணும் வேணாம்... இருக்கற இடத்துல சிறப்பா வேலை செஞ்சா போதும்'னு, மறுத்துட்டாராம் ஓய்...'' எனக் கூறிவிட்டு குப்பண்ணா கிளம்ப, மற்றவர்களும் புறப்பட்டனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us