ADDED : ஆக 06, 2011 09:40 PM
சாத்தூர்:சாத்தூர் மஞ்சள் ஒடைப்பட்டியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் மனைவி
திரேஸ்(47).இவர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நேற்று முன்தினம்
திண்டுக்கல்லில் இருந்து ரயிலில் சாத்தூர் வந்தார்.
உடன் வந்த மகள் கவிதா
அணிந்திருந்த ஐந்தரைஅரை பவுன் நகையை கழட்டி திரேஸ்சிடம் கொடுத்துள்ளார்.
நகைகளை பேக்கில் வைத்து கொண்டு சாத்தூர் வந்து, கண்டியாபுரம் பஸ்சில்
மஞ்சள்ஒடைப்பட்டி சென்றார். வீட்டிற்கு சென்று பேக்கை திறந்து பார்த்த போது
அதில் இருந்த நகைகள் திருடு போனது . சாத்தூர் டவுன் போலீசார்
விசாரிக்கின்றனர்.


