/உள்ளூர் செய்திகள்/திருச்சி/திருச்சி மேயர் தேர்தலில் பொங்கும் கொங்கு "பாசம்'திருச்சி மேயர் தேர்தலில் பொங்கும் கொங்கு "பாசம்'
திருச்சி மேயர் தேர்தலில் பொங்கும் கொங்கு "பாசம்'
திருச்சி மேயர் தேர்தலில் பொங்கும் கொங்கு "பாசம்'
திருச்சி மேயர் தேர்தலில் பொங்கும் கொங்கு "பாசம்'
ADDED : அக் 10, 2011 02:56 AM
திருச்சி: தி.மு.க., சார்பில், திருச்சி மாநகாட்சி மேயர் தேர்தலில் போட்டியிடும் கொங்கு வேளாளக்கவுண்டர் வேட்பாளரை ஆதரித்து, கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த இன்னாள், முன்னாள் அமைச்சர்கள் பிரச்சாரத்தில் களம் இறங்கியுள்ளனர்.திருச்சி மாநகராட்சி மேயர் பதவிக்கு, 21 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.
இதில், ஐந்து பேர் மாற்று வேட்பாளர். தி.மு.க., சார்பில், விஜயா ஜெயராஜ், அ.தி.மு.க., சார்பில் ஜெயா, ம.தி.மு.க., ரொஹையா, காங்கிரஸ் விஜயா, தே.மு.தி.க., சித்ரா, ஐ.ஜே.கே., லதா, பா.ஜ., கிரிஜா, பா.ம.க., லீமாரோஸ்லின் ஆகியோர் களத்தில் உள்ளனர்.பலமுனைப் போட்டி ஏற்பட்டுள்ளதால், அதை சமாளிக்க அனைத்து வேட்பாளர்களும் பல வகையில் வியூகம் வகுத்து பணியாற்றி வருகின்றனர். தி.மு.க., சார்பில் களமிறக்கப்பட்டுள்ள விஜயா, கொங்கு வேளாள கவுண்டர் இனத்தைச் சேர்ந்தவர்.இவருக்கு ஆதரவாக கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த மத்திய இணையமைச்சர் காந்திச்செல்வன், நில அபகரிப்பு வழக்கில் சிக்கிய முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி.,ராஜா ஆகியோர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். பிரச்சாரம் செய்ய வந்துள்ள ராஜாவை, திருச்சி மக்கள், கூடி நின்று வேடிக்கை பார்க்கின்றனர்.'வேட்பாளர் விஜயா ஜெயராஜ், என்னதான் திருச்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், அந்த கொங்கு பாசம் கொஞ்சமும் குறையவில்லை' என, தி.மு.க.,வினர் அங்கலாய்கின்றனர்.


