/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/சிபிஐ ஒன்றிய செயலாளரின் மனைவியைதாக்கிய போலீஸ்காரர் கைதுசிபிஐ ஒன்றிய செயலாளரின் மனைவியைதாக்கிய போலீஸ்காரர் கைது
சிபிஐ ஒன்றிய செயலாளரின் மனைவியைதாக்கிய போலீஸ்காரர் கைது
சிபிஐ ஒன்றிய செயலாளரின் மனைவியைதாக்கிய போலீஸ்காரர் கைது
சிபிஐ ஒன்றிய செயலாளரின் மனைவியைதாக்கிய போலீஸ்காரர் கைது
ADDED : ஜூலை 30, 2011 01:07 AM
ஓட்டப்பிடாரம்: ஓட்டப்பிடாரம் சிபிஐ கட்சி ஒன்றிய செயலாளரின் மனைவியை
தாக்கிய போலீஸ்காரர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பாஞ்சாலங்குறிச்சி இந்திராநகரில் வசித்து வருபவர் ஓட்டப்பிடாரம் சிபிஐ
கட்சியின் ஒன்றிய செயலாளர் அழகு. இவரின் மனைவி கிருபாராணி(31). இவர் நேற்று
முன்தினம் வீட்டில் இருக்கும் போது சிலோன் காலனியில் வசித்து வரும்
போலீஸ்காரர் சக்திவேல்(44) கிருபாராணியை இழிவாக பேசி தாக்கினாராம். இதில்
காயம் அடைந்த கிருபாராணி தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக
சேர்க்கப்பட்டார். இதுகுறித்து ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்குப்பதிவு
செய்து போலீஸ்காரர் சக்திவேலை கைது செய்து, விளாத்திகுளம் கோர்ட்டில்
ஆஜர்படுத்தி, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சக்திவேல்
பேரூரணியில் உள்ள போலீஸ் பயிற்சி பிரிவில் பணி புரிந்து வருகிறார்
என்பதுகுறிப்பிடத்தக்கது.