ADDED : செப் 03, 2011 12:18 AM
ஓசூர்; ஓசூர் அருகே வனப்பகுதியில் மர்மமான முறையில் வாலிபர் இறந்து கிடந்தார்.
ஓசூர் அருகே காமன்தொட்டி வனப்பகுதியில் நேற்று காலை 22 வயது மதிக்கத்தக்க வாலிபர் இறந்து கிடந்தார். உடம்பில் காயங்கள் இருந்தது. அவர் எப்படி இறந்தார் என தெரியவில்லை. அந்த வழியாக சென்றவர்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். சூளகிரி போலீஸார் பிணத்தை கைப்பற்றி விசாரிக்கின்றனர். அவர் தற்கொலை செய்து கொண்டரா? அல்லது யராவது அவரை கொலை செய்து பிணத்தை வீசி சென்றார்களா? என விசாரிக்கின்றனர்.


