/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/காரைக்காலில் குழந்தைகள் அறிவியல் திருவிழாகாரைக்காலில் குழந்தைகள் அறிவியல் திருவிழா
காரைக்காலில் குழந்தைகள் அறிவியல் திருவிழா
காரைக்காலில் குழந்தைகள் அறிவியல் திருவிழா
காரைக்காலில் குழந்தைகள் அறிவியல் திருவிழா
ADDED : அக் 05, 2011 01:21 AM
காரைக்கால் : காரைக்காலில் 5 நாள் நடைபெறும் குழந்தைகள் அறிவியல் திருவிழா துவங்கியது.காரைக்காலில் கல்வித்துறை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பதுறை மற்றும் அறிவியல் இயக்கம் சார்பில் 5 நாட்கள் நடைபெறும் குழந்தைகள் அறிவியல் திருவிழா நேற்று முன்தினம் கோவில்பத்து அரசு உயர்நிலைப் பள்ளியில் துவங்கியது.
இதில் மாகி, ஏனாம் பிராந்தியத்தைச் சேர்ந்த 50 மாணவர்களும், காரைக்காலில் அறிவியலில் சிறந்து விளங்கும் 50 மாணவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.மூன்று பிராந்தியங்களில் உள்ள கலாசாரம், பழக்கவழக்கம், அறிவியல் முறைகள் குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ளும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்ட குழந்தைகள் அறிவியல் திருவிழாவில் 6 பிரிவுகளின் கீழ் நிகழ்ச்சிகள் நடக்கிறது. அறிவியலின் செயல்பாடு, எண்கள், கையில் காகிதம், அதிசயங்களை விவரித்தல், இயற்கை படிப்பு, அறிவியல் பொம்மை தயாரித்தால் ஆகிய தலைப்புகளில் நிகழ்ச்சிகள் நடக்கிறது.தினந்தோறும் மாலை நேரத்தில் 3 பிராந்திய மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது.ஒட்டுமொத்த புறக்கணிப்பு:காரைக்காலில் 3 பிராந்திய மாணவர்கள் கலந்து கொள்ளும் குழந்தைகள் அறிவியல் திருவிழா துவக்க நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. இதில் வேளாண் அமைச்சர் சந்திரகாசு, எம்.எல்.ஏ.க்கள் சிவா, நாஜிம், சிவக்குமார், திருமுருகன் மற்றும் மாவட்ட கலெக்டர் பிராங்களின்லால்டின் குமா, கல்வித்துறை இயக்குநர் பன்னீர்செல்வம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை இயக்குநர் சுந்தரவடிவேல் உட்பட பலர் கலந்து கொள்வதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் விழாவில் ஒருவர் கூட கலந்து கொள்ளவில்லை. தனியார் விழாக்களில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டும் அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள், அரசு அதிகாரிகள் அரசு நடத்தும் விழாக்களைப் புறக்கணிப்பதன் காரணம் புலப்படவில்லை.


