/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/அ.தி.மு.க., மேயர் வேட்பாளர் சொத்து மதிப்பு ரூ. 12.34 கோடிஅ.தி.மு.க., மேயர் வேட்பாளர் சொத்து மதிப்பு ரூ. 12.34 கோடி
அ.தி.மு.க., மேயர் வேட்பாளர் சொத்து மதிப்பு ரூ. 12.34 கோடி
அ.தி.மு.க., மேயர் வேட்பாளர் சொத்து மதிப்பு ரூ. 12.34 கோடி
அ.தி.மு.க., மேயர் வேட்பாளர் சொத்து மதிப்பு ரூ. 12.34 கோடி
ADDED : செப் 28, 2011 01:06 AM
கோவை : 'கோவை மாநகர அ.தி.மு.க., மேயர் வேட்பாளர் வேலுசாமி குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு 12 கோடியே 34 லட்சம் ரூபாய்' என, தேர்தல் அலுவலரிடம் தாக்கல் செய்துள்ள ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கு அ.தி.மு.க., வேட்பாளராக முன்னாள் அமைச்சர் வேலுசாமி போட்டிடுகிறார்.
இவர், நேற்று மாநகராட்சி கமிஷனர் பொன்னுசாமியிடம் மனு தாக்கல் செய்தார். மனுவில் தாக்கல் செய்துள்ள சொத்து பட்டியல் விபரம்:வேலுசாமி பெயரில் ரொக்கம் 2 லட்சம் ரூபாய். பாங்க் ஆப் இந்தியாவில் 49 ஆயிரத்து 288 ரூபாய். இந்தியன் ஓவர்சீஸ் வங்கி(சென்னை, தலைமை செயலக கிளை) 5 ஆயிரத்து 265 ரூபாய். மனைவி பானுமதியிடம் ரொக்கம் ஒரு லட்சம் ரூபாய். சூலூர் ஐ.ஓ.பி., வங்கியில் 13 ஆயிரத்து62 ரூபாய். திருச்சி ரோடு, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியில் 14 ஆயிரத்து 800 ரூபாய். சென்னை, அண்ணா சாலை, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியில் 38 ஆயிரத்து 168 ரூபாய். மகன் அருண்குமார் பெயரில் ரொக்கம் பத்தாயிரம் ரூபாய். சூலூர், ஐ.ஓ.பி., வங்கியில் 1,586 ரூபாய். மகன் சஞ்சீவி ஜெயதேவனிடம் ரொக்கம் ஐந்தாயிரம் ரூபாய். தாயார் கணபதி அம்மாளிடம் ரொக்கம் 50 ஆயிரம் ரூபாய். தனது தாயார் தவிர மற்ற அனைவருக்கும் சூலூர்,எல்.ஐ.சி., காப்பீடு நிறுவனத்தில் தலா ஐந்து லட்சம் ரூபாய்க்கு பாலிசி உள்ளது.மகன் அருண்குமார் பெயரில் பத்து லட்சம் ரூபாய் மதிப்பிலான ஸ்கார்பியோ மற்றும் 6.5 லட்சம் ரூபாய் மதிப்பில் ஷிப்ட் கார் உள்ளது. தங்க நகைகளின் மதிப்பு, தனது பெயரில் 25 பவுன், மனைவி பெயரில் 500 பவுன், மகன்களின் பெயரில் இருபது பவுன்(தலா பத்து பவுன்) உள்ளது.தனது பெயரில் காடம்பாடி, இருகூர், கண்ணம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் 12.41 ஏக்கர் நிலம், தாயார் கணபதி அம்மாள் பெயரில் காடம்பாடி கிராமத்தில் இரண்டு ஏக்கர் நிலம் உள்ளது. விளாங்குறிச்சி பகுதியில் 10.44 சென்ட் நிலம்.தனது பெயரில் கடன் இல்லை. மனைவி பெயரில் சூலூர், ஐ.ஓ.பி., வங்கியில் 3 லட்சம் மற்றும் காங்கேயம்பாளையம் வங்கியில் 3.5 லட்சம் ரூபாய். மகன் அருண்குமார் பெயரில் கல்வி கடன் 7 லட்சம் ரூபாய். ஷிப்ட் காருக்கு 4.5 லட்சம் ரூபாய்.வேலுசாமி பெயரில் அசையும் சொத்துக்கள் மொத்த மதிப்பு 5 லட்சத்து 54 ஆயிரத்து 553 ரூபாய். மனைவி பானுமதி பெயரில் 46 லட்சத்து 66 ஆயிரத்து 30 ரூபாய். மகன் அருண்குமார் பெயரில்18 லட்சத்து 11 ஆயிரத்து 586 ரூபாய். மகன் சஞ்சீவி பெயரில் ஒரு லட்சத்து 55 ஆயிரம் ரூபாய். தாயார் கணபதி அம்மாள் பெயரில் 50 ஆயிரம் ரூபாய் உள்ளது. வேலுசாமி பெயரில் அசையா சொத்துக்கள் மொத்த மதிப்பு 9.65 கோடி. மனைவி பெயரில் ரூ. 1.5 கோடி. தாயார் பெயரில் ரூ. 1.5 கோடி உள்ளது.வேலுசாமி பெயரிலுள்ள மொத்த சொத்துக்களின் மதிப்பு 9 கோடியே 70 லட்சத்து 54 ஆயிரத்து 553 ரூபாய். மனைவி பெயரில் ஒரு கோடியே 96 லட்சம் ரூபாய். மகன்கள் பெயரில் 19 லட்சத்து 66 ஆயிரத்து 586 ரூபாய். தாயார் பெயரில் ஒரு கோடியே 50 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய். வேட்பாளர் குடும்பத்தின் மொத்த சொத்துக்களின் மதிப்பு 12 கோடியே 34 லட்சம் ரூபாய்.இவ்வாறு, ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.