ADDED : ஜூலை 28, 2011 10:08 PM
கூடலூர் : முதுமலை புலிகள் காப்பகம் மசினகுடி வனத்துறை சோதனை சாவடி
அருகேயிருந்த சந்தன மரம் ஒன்று கடந்த 25ம் தேதி அதிகாலையில் வெட்டி
கடத்தப்பட்டது.
மரம் அருகேயுள்ள வனப்பகுதிக்குள் எடுத்து செல்லப்பட்டு,
இரண்டு இடங்களில் வைத்து சிறிய துண்டுகளாக வெட்டப்பட்டு கொண்டு சென்றது
தெரிய வந்துள்ளது. இந்த கடத்தலில் ஈடுப்பட்டவர்களை பிடிக்க முதுமலை
புலிகள் காப்பக கள இயக்குனர் ராஜீவ் ஸ்ரீவஸ்தவா உத்தரவின்படி, வனச்சரகர்
சுத்தர்ராஜன் மேற்பார்வையில், வனவர் ராஜ், வன காப்பாளர்கள் சிவகுமார்,
கோகுல்ராஜ், கோபலன் தலைமையில் நான்கு தனிப்படை அமைத்து தீவிர விசாரணை
மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், மசினகுடி குரும்பர்பாடி
பகுதியை சேர்ந்த ஆதிவாசி கெம்பன் (55) என்பவரை வனத்துறையினர் நேற்று
பிடித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் சிலரை தேடிவருகின்றனர்.


