ADDED : ஆக 02, 2011 11:43 PM
கூடலூர் : கூடலூரில் அ.தி.மு.க., பொதுக்கூட்டம் தங்கதமிழ்செல்வன் எம்.எல்.ஏ., தலைமையில் நடந்தது.
நகரசெயலாளர் சோலை ராஜ் வரவேற்றார். எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் சந்தனகுமார், மாவட்ட விவசாய அணி தலைவர் ராமர், முன்னாள் நகராட்சி தலைவர் சின்னமாயன் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்.பி., சையதுகான், தலைமை கழக பேச்சாளர்கள் மதன், நாகையன், நகர துணைச் செயலாளர் பாலைராஜா, நகராட்சி துணைத்தலைவர் காமாட்சி பங்கேற்றனர்.


