/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/பள்ளி, கல்லூரி மாணவர்களின் கடற்கரை தூய்மைப்படுத்தும் விழிப்புணர்வு முகாம்பள்ளி, கல்லூரி மாணவர்களின் கடற்கரை தூய்மைப்படுத்தும் விழிப்புணர்வு முகாம்
பள்ளி, கல்லூரி மாணவர்களின் கடற்கரை தூய்மைப்படுத்தும் விழிப்புணர்வு முகாம்
பள்ளி, கல்லூரி மாணவர்களின் கடற்கரை தூய்மைப்படுத்தும் விழிப்புணர்வு முகாம்
பள்ளி, கல்லூரி மாணவர்களின் கடற்கரை தூய்மைப்படுத்தும் விழிப்புணர்வு முகாம்
ADDED : செப் 04, 2011 09:37 PM
பொன்னேரி : இந்திய கடல்சார் துறை சார்பில் நடந்த, கடற்கரை தூய்மைப்படுத்தும் விழிப்புணர்வு முகாமில், நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றனர்.
இந்தியன் மாரிடைம் பவுண்டேஷன் மற்றும் ஆர்டி பவுண்டேஷன் இணைந்து, ஆண்டுதோறும், கடற்கரையை சுத்தப்படுத்தும் விழிப்புணர்வு முகாம்களை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு, இன்டர்நேஷனல் கோஸ்டல் கிளினப் 2011 என்ற பெயரில் பழவேற்காடு கடற்கரை பகுதிகளை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டது. இதில், ஜே.பி.ஆர்., பொறியியல் கல்லூரி, பொன்னேரி உலகநாத நாராயணசாமி அரசு கல்லூரி, கிருஷ்ணாபுரம் ஸ்ரீ தேவி கலைக்கல்லூரி, மீஞ்சூர் ஜெயின் கல்லூரி, பழவேற்காடு ஐ.சு. அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளின் நாட்டு நலத் திட்ட மாணவர்கள் பங்கேற்றனர். பழவேற்காடு லைட் அவுஸ் குப்பம், கூனங்குப்பம், அரங்கம் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் பரவிக் கிடந்த பிளாஸ்டிக் கப், பிளாஸ்டிக் கவர் உள்ளிட்ட குப்பைகளை, சிறு சிறு மூட்டைகளாக கட்டி ஊராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். முகாமில் பங்கேற்ற பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பொன்னேரி ஆர்.டி.ஓ., கந்தசாமி பாராட்டு சான்றிதழ் வழங்கினார். முன்னதாக, கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்ட மாணவர்களுக்கு டி-சர்ட், கேப், பேக், கையுறை வழங்கப்பட்டன. பொன்னேரி எல்.என்.ஜி., அரசுக் கல்லூரி உள்ளிட்ட ஒரு சில கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் மற்ற பொருட்கள் வழங்கப்படாததால் ஆர்வமுடன் பங்கேற்ற மாணவர்கள் வருத்தத்துடன் சென்றனர். இதனால் முகாம் ஏற்பாடு செய்தவர்களுக்கும் மாணவர்களை அழைத்து சென்ற ஆசிரியர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.


