ADDED : அக் 06, 2011 11:47 PM
மூணாறு : மூணாறில் காட்டுயானையால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பகலில்
ரோடு மற்றும் தேயிலை தோட்டங்களில் வலம் வருவதுடன், இரவில் குடியிருப்பு
பகுதிக்குள் அந்த யானை நுழைகிறது. தோட்டங்களில் பயிரிடப்பட்டிருக்கும்
வாழை, பீன்ஸ், காரட், முட்டைகோஸ் போன்றவற்றை சேதப்படுத்துகிறது. இதனால்,
தொழிலாளர்கள் பீதியில் உள்ளனர். சில இடங்களில் கடைகளை உடைத்து, அங்கு
வைத்திருக்கும் பழங்கள் மற்றும் பொருட்களையும் யானைகாட்டு சேதபடுத்துகிறது.


