/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/வீடு புகுந்து பெண்ணிடம் எட்டு சவரன் நகை பறிப்புவீடு புகுந்து பெண்ணிடம் எட்டு சவரன் நகை பறிப்பு
வீடு புகுந்து பெண்ணிடம் எட்டு சவரன் நகை பறிப்பு
வீடு புகுந்து பெண்ணிடம் எட்டு சவரன் நகை பறிப்பு
வீடு புகுந்து பெண்ணிடம் எட்டு சவரன் நகை பறிப்பு
ADDED : செப் 06, 2011 10:32 PM
தியாகதுருகம் : வீடு புகுந்து பெண்ணிடம் நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தியாகதுருகம் அடுத்த பழைய சிறுவங்கூரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்,55. இவரது மனைவி செல்வராணி, 50. இருவரும் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவு 1 மணிக்கு பின்பக்க கதவை
உடைத்து இரண்டு மர்ம நபர்கள் வீட்டினுள் புகுந்துள்ளனர். தூங்கிக் கொண்டிருந்த செல்வராணி கழுத்தில் இருந்த 8 சவரன் தாலிச்செயினை மர்ம நபர்கள் பிடித்து இழுத்துள்ளனர். திடுக்கிட்டு எழுந்த செல்வராணி சத்தம் போட்டதும், செயினை பறித்துக் கொண்டு மர்ம நபர்கள் பின்வாசல் வழியே ஓடி தப்பினர். செயினை பறிக்க வந்தவர்கள் முகத்தில் கருப்பு துணி கட்டியிருந்தனர். புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.


