Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/மதுரையில் பாரம்பரியத்தை பாதுகாக்க போட்டி

மதுரையில் பாரம்பரியத்தை பாதுகாக்க போட்டி

மதுரையில் பாரம்பரியத்தை பாதுகாக்க போட்டி

மதுரையில் பாரம்பரியத்தை பாதுகாக்க போட்டி

ADDED : ஜூலை 24, 2011 11:49 PM


Google News

மதுரை : இந்திய தொழில் கூட்டமைப்பு(சி.ஐ.ஐ.) மற்றும் 'இன்டாக்' என்ற அமைப்பின் சார்பில், மதுரையில் நேற்று பாரம்பரிய இடங்களை கண்டறியும் 'க்ளூ' போட்டி நடத்தப்பட்டது.

மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் உள்ள சிலைகள், முக்கிய இடங்களை கண்டறியும் போட்டியில், 40 குழுக்கள் பங்கேற்றன. ஆயிரங்கால் மண்டபம், அதன் அருகேயுள்ள நந்தி சிலை, பழைய திருக்கல்யாண மண்டபத்தில் உள்ள பூகோளம், வான்கோளம், கோபுரதாங்கிகள் குறித்து 'க்ளூ' கொடுக்கப்பட்டன. போட்டியின் நிறைவில், பாரம்பரிய இடங்கள் குறித்து மதுரை காமராஜ் பல்கலை முன்னாள் வரலாற்று பேராசிரியர் வெங்கட்ராமன் விளக்கினார். சி.ஐ.ஐ., தலைவர் ஷாம்பிரகாஷ்குப்தா, சுற்றுலா பிரிவுத் தலைவர் வாசுதேவன், 'இன்டாக்' அமைப்பின் பொருளாளர் ராஜேஷ்கண்ணா பங்கேற்றனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us