/உள்ளூர் செய்திகள்/வேலூர்/அ.தி.மு.க.,வுக்கு பாடம் புகட்டுங்கள் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பேச்சுஅ.தி.மு.க.,வுக்கு பாடம் புகட்டுங்கள் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பேச்சு
அ.தி.மு.க.,வுக்கு பாடம் புகட்டுங்கள் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பேச்சு
அ.தி.மு.க.,வுக்கு பாடம் புகட்டுங்கள் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பேச்சு
அ.தி.மு.க.,வுக்கு பாடம் புகட்டுங்கள் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பேச்சு
ADDED : அக் 12, 2011 02:24 AM
வேலூர்: ''கூட்டணி கட்சிகளை உதாஷினப்படுத்திய அ.தி.மு.க., வுக்கு பாடம்
புகட்டுங்கள்,'' என மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பேசினார்.
வேலூர்
மாநகராட்சி மேயர் பதவிக்கு மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் லதா
போட்டியிடுகின்றார். இவரை ஆதரித்து வேலூரில் நடந்த தேர்தல் பிரச்சார
கூட்டத்தில் அக்கட்சியின் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் பேசியதாவது:
சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியில் தொகுதி உடன்பாடு செய்து கொண்டு
போட்டியிட்டீர்கள் இப்போது உள்ளாட்சி தேர்தலில் ஏன் இணைந்து
போட்டியிடவில்லை என கேட்கின்றார்கள். ஆட்சியை பிடிக்க மட்டும் அ.தி.மு.க.,
வுக்கு கூட்டணி கட்சிகள் தேவைப்படுகின்றது. ஆட்சியை பிடித்த பின் ஏற்றி
விட்ட ஏணியை எட்டி உதைப்பது போல கூட்டணி கட்சிகளை அ.தி.மு.க.,
உதாஷினப்படுத்தி விட்டது. அதன் பிறகு தான் தே.மு.தி.க.,வும், மார்க்சிஸ்ட்
கட்சியும் இணைந்து உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுகின்றது. உள்ளாட்சி
தேர்தலில் அ.தி.மு.க., வுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். இங்கு
வேட்பாளர்களாக நிற்பவர்கள் நேர்மையான, முறைகேடுகள் இல்லாத நிர்வாகத்தை
அளிப்பார்கள். இவ்வாறு பேசினார்.


