ADDED : ஆக 01, 2011 11:53 PM
இஸ்லாமாபாத்: ஆப்கன் மற்றும் பாகிஸ்தானில் உள்ள நேட்டோ படைகளுக்கு, எண்ணெய் ஏற்றிச் சென்ற, 10 டேங்கர் லாரிகளை பயங்கரவாதிகள் தீ வைத்து எரித்தனர்.
இதில், ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர். டேங்கர் லாரிகளில் இருந்து பரவிய தீ, சாலையோர ஓட்டல்கள், கடைகளையும் பதம் பார்த்தது. இதனால், சிந்து மாகாணத்தின் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


