/உள்ளூர் செய்திகள்/கரூர்/7 நாளுக்கு ஒரு முறை தான் தண்ணீர் : கரூர் 20வது வார்டு மக்கள் கண்ணீர்!7 நாளுக்கு ஒரு முறை தான் தண்ணீர் : கரூர் 20வது வார்டு மக்கள் கண்ணீர்!
7 நாளுக்கு ஒரு முறை தான் தண்ணீர் : கரூர் 20வது வார்டு மக்கள் கண்ணீர்!
7 நாளுக்கு ஒரு முறை தான் தண்ணீர் : கரூர் 20வது வார்டு மக்கள் கண்ணீர்!
7 நாளுக்கு ஒரு முறை தான் தண்ணீர் : கரூர் 20வது வார்டு மக்கள் கண்ணீர்!
ADDED : ஜூலை 19, 2011 12:33 AM
கரூர்: கரூர் நகராட்சி 20 வது வார்டு மற்றும் மக்கள்பாதை சுற்றுப்பகுதியில் முறையாக குடிநீர் வழங்குவதில்லை. ஏழு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வழங்குவதால் இப்பகுதி பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர் . கரூர் நகராட்சி மூலம் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் அனைத்து பகுதிக்கும் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. பல வார்டுகளில் முறையாக தண்ணீர் வழங்கப்பட்டு வரும் நிலையில் ஏழு நாட்களுக்கு ஒருமுறை 20வது வார்டில் தண்ணீர் வழங்கப்படுகிறது. அதுவும் சுழற்சி முறையில் இரண்டு மணி நேரம் தண்ணீர் மட்டுமே திறந்துவிடப்படுகிறது. இதுமட்டுமின்றி தண்ணீர் எப்போது வரும் என தெரியாமல் பகுதி வாழ்மக்கள் ஆறு நாள் முடிந்து ஏழாவது நாள் வேலைக்கு விடுப்பு போட்டுவிட்டு தண்ணீருக்காக காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது.
கடந்த 13ம் தேதி இரவு 10.45 மணிக்கு 20வது வார்டுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. சுமார் ஒரு மணி நேரம் வந்த தண்ணீர் திடீரென நின்றது. சிறிது நேரத்தில் அப்பகுதியாக வந்த கவுன்சிலர் கதிரவனிடம் பகுதி மக்கள் இப்பகுதிக்கு சரிவர குடிநீர் வருவதில்லை என புகார் தெரிவித்தனர். உடனே, கவுன்சிலர் தண்ணீர் திறந்துவிடும் அலுவலர்களுக்கு ஃபோன் செய்து விசாரித்ததில், 'வேறு பகுதிக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது' என கூறினார்.இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறியதாவது: மக்கள்பாதை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளுக்கு குடிநீர் திறந்துவிடுவதில் அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர். இரண்டு நாளுக்கு ஒருமுறை குடிநீர் திறந்துவிட்ட தண்ணீர் தற்போது ஏழு நாட்களுக்கு ஒருமுறை மட்டும் திறந்து விடப்படுகிறது. குறிப்பாக, தண்ணீர் வேகம் குறைந்து வருவதால் ஒருகுடம் நிரம்ப 20 நிமிடமாகிறது.
இதுமட்டுமின்றி ஒருசில நாட்கள் காலை 6 மணிக்கும், சில நாட்களுக்கு இரவு 10 மணிக்கு மேலும் குடிநீர் மாறி மாறி திறந்துவிடுகின்றனர். இதனால், ஒருசில சமயங்களில் தண்ணீர் வீணா க கீழே செல்கிறது. மேலும், எந்த நேரத்தில் தண்ணீர் வரும் என தெரியாமல் வேலைக்கு செ ல்லும் பெண்கள் விடுப்பு எடுக் க வேண்டியுள்ளது. எனவே, இரவு 8 மணிக்குள் தண்ணீர் திறந்துவிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தண்ணீர் திறந்துவிடும் நேரம் குறித்து பகுதிமக்களுக்கு முன்கூட்டியே தெரியப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர். குடி தண்ணீர் முறையாக விநியோகம் செய்யாமல் இருப்பதால் ஆழ்குழாய் மூலம் உப்பு தண்ணீரை பிடித்து பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.