தே.மு.தி.க., கவுன்சிலர்கள் மற்றும் இரண்டு மார்க்சிஸ்ட் பெண் வேட்பாளர்கள் ஒரு லாரியில் கும்பிட்டவாறு நின்று கொண்டிருக்க, 'இதோ வருகிறார், வந்து விட்டார்' என ஒரு கட்சி தொண்டர் மைக்கில் ஒரு மணிநேரம் 'அண்டப்புழுகு' விட்டுக் கொண்டிருந்தார்.
இயற்கைக்கு கூட இது பிடிக்கவில்லை போலும். இடி, மின்னலுடன் வந்த மழை அப்பகுதியை இருட்டாக்கியது. விஜயகாந்த் வந்த போது ஒரே ஒரு லைட் எரிந்து கொண்டிருக்க, அந்த இடத்தில் பிரசார வானத்தை நிறுத்தினர். வெளிச்சம் குறைவாக இருந்ததால், பிரசார வானத்தில் இருந்த விளக்கு வெளிசத்தில் அவர் பேசத்துவங்கினார். பாவம் கவுன்சிலர் வேட்பார்கள் நின்றிருந்த இடம் கும்மிருட்டாக இருந்தது. விஜயகாந்தாலும் அவர்களை துல்லியமாக பார்க்க முடியவில்லை. 'நமக்காக தலைவர் பிரசாரத்திற்கு வந்த போது மின்சாரமும், ஜெனரேட்டர் மூலம் வைத்திருந்த போக்கஸ் லைட்டும் இப்படி மோசம் செய்துவிட்டதே' என, பெண் கவுன்சிலர்கள் ஒருவருக்கொருவர் குமுறியதுடன், ஆரம்பமே ரொம்பவே கண்ணைக் கட்டுதே என பெரு மூச்சுவிட்டு லாரியில் இருந்து இறங்கி நடையை கட்டினர்.