சங்கராபுரத்தில் ஆசிரியர் தின விழா
சங்கராபுரத்தில் ஆசிரியர் தின விழா
சங்கராபுரத்தில் ஆசிரியர் தின விழா
ADDED : செப் 07, 2011 10:23 PM
சங்கராபுரம்:சங்கராபுரம் பகுதியில் ஆசிரியர் தினவிழா நடந்தது.சங்கராபுரம்
அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த ஆசிரியர் தின விழாவிற்கு அரிமா சங்க
தலைவர் ராஜா தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் சுந்தரபாண்டியன், வணிகர்
பேரவை முத்துகருப்பன், ரோட்டரி தலைவர் வெங்கடேசன் உட்பட பலர் கலந்து
கொண்டனர்.
சங்கராபுரம் அரசு பெண் கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவிற்கு ரோட்டரி
சங்க தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.
பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்
குசேலன், மாணவிகளுக்கு பரிசு வழங்கினார். சங்கராபுரம் வள்ளலார் பள்ளியில்
நடந்த விழாவிற்கு வள்ளலார் மன்ற தலைவர் பால்ராஜ் தலைமை தாங்கினார்.
டாக்டர் ராதாகிருஷ்ணன் படத்தை அருணாசலம் திறந்து வைத்தார்.சங்கராபுரம்
ஆமினா அறக்கட்டளை சார்பில் சங்கராபுரம் உண்டு உறைவிட பள்ளியில் நடந்த
விழாவிற்கு நல்லாசிரியர் முகமது உசேன் தலைமை தாங்கினார்.சங்கராபுரம் ஸ்டார்
நர்சரி பள்ளியில் நடந்த விழாவிற்கு தாளாளர் நூர்பாஷா தலைமை தாங்கினார்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு செயலாளர் முகமது ரபி பரிசு
வழங்கினார். முதல்வர் ஷபியா நன்றி கூறினார்.


