/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/தி.மு.க., பிரமுகருக்கு நிபந்தனை ஜாமின்தி.மு.க., பிரமுகருக்கு நிபந்தனை ஜாமின்
தி.மு.க., பிரமுகருக்கு நிபந்தனை ஜாமின்
தி.மு.க., பிரமுகருக்கு நிபந்தனை ஜாமின்
தி.மு.க., பிரமுகருக்கு நிபந்தனை ஜாமின்
ADDED : ஆக 03, 2011 01:34 AM
கோவை : நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தி.மு.க., பிரமுகர் மீன்கடை சிவாவுக்கு நேற்று நிபந்தனை ஜாமின் வழங்கி கோர்ட் உத்தரவிட்டது.
பூமார்க்கெட் தெப்பக்குளத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (28). 2006ல் குறிச்சி- வெள்ளலூர் ரோட்டில் நூர்ஜகான் என்பவரிடம் 6.75 சென்ட் இடத்தை வாங்கினார். அங்கு வேலி அமைக்க சென்றபோது, ஏற்கெனவே கம்பிவேலி போட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். விசாரித்ததில், தி.மு.க., பிரமுகர் மீன்கடை சிவா, இடம் விற்ற நூர்ஜகான் இருவரும் இணைந்து மோசடி செய்திருப்பதை தெரிந்து கொண்டார். இந்த வழக்கில், இரண்டு வாரங்களுக்கு முன் மீன்கடை சிவாவை போலீசார் கைது செய்தனர். அவரது ஜாமின் மனு மீதான விசாரணை மாஜிஸ்திரேட் தெய்வம் முன் நேற்று ஜே.எம்.,7 கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வாதத்தை கேட்ட மாஜிஸ்திரேட், குற்றம் சாட்டப்பட்ட சிவாவுக்கு நிபந்øனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். தினமும் காலை, மாலை மாநகர குற்றப்பிரிவு போலீசில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனைப்படி ஜாமின் பெற்ற சிவா, கோவை மத்திய சிறையிலிருந்து நேற்று இரவு 7.45 மணிக்கு விடுதலையானார்.


