/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மகளிர் சுய உதவிக்குழு துவங்க இலக்குமகளிர் சுய உதவிக்குழு துவங்க இலக்கு
மகளிர் சுய உதவிக்குழு துவங்க இலக்கு
மகளிர் சுய உதவிக்குழு துவங்க இலக்கு
மகளிர் சுய உதவிக்குழு துவங்க இலக்கு
ADDED : ஆக 03, 2011 11:03 PM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி வடக்கு, தெற்கு ஒன்றியங்களில் நடப்பாண்டில் 278 மகளிர் சுயஉதவிக்குழுக்கள் துவங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி வடக்கு, தெற்கு ஒன்றியங்களுக்குட்பட்ட 65 ஊராட்சிகளில் மொத்தம் 278 மகளிர் சுயஉதவிக்குழுக்கள் நடப்பாண்டில் துவங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட 39 ஊராட்சிகளில், ஹை-கிளாஸ் தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் 122 குழுக்களும், ஆச்சிபட்டி, மண்ணூர் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த மகளிர் குழு கூட்டமைப்பு சார்பில் தலா 20 குழுக்களும் சேர்த்து 162 குழுக்கள் துவங்கப்படவுள்ளன. இதில், முதன்மைப்படுத்தும் வகையில் 22 குழுக்களும், தேசிய ஊரக வேலை உறுதி திட்ட ஊராட்சிகளில் 140 குழுக்களும் துவங்கப்படவுள்ளன. தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட 26 ஊராட்சிகளில், ஹை-கிளாஸ் தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் 76 குழுக்களும், சின்னாம்பாளையம் மற்றும் கஞ்சம்பட்டி ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த மகளிர் குழு கூட்டமைப்பு சார்பில் தலா 20 குழுக்களும் சேர்த்து 116 குழுக்களும் துவங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், முதன்மை ஊராட்சிகள் அடிப்படையில் 16 குழுக்களும், தேசிய ஊரக வேலை உறுதி திட்ட ஊராட்சிகளில் 60 குழுக்களும் துவங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.


