Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ஆட்டோவில் தவறவிட்ட நகை, பணம் உரியவரிடம் போலீஸ் ஒப்படைப்பு

ஆட்டோவில் தவறவிட்ட நகை, பணம் உரியவரிடம் போலீஸ் ஒப்படைப்பு

ஆட்டோவில் தவறவிட்ட நகை, பணம் உரியவரிடம் போலீஸ் ஒப்படைப்பு

ஆட்டோவில் தவறவிட்ட நகை, பணம் உரியவரிடம் போலீஸ் ஒப்படைப்பு

ADDED : ஆக 03, 2011 01:32 AM


Google News

புதுச்சேரி : ஆட்டோவில் தவறவிட்ட நகை, பணம் அடங்கிய கைப்பையை போலீசார் மீட்டு, உரியவரிடம் ஒப்படைத்தனர்.

பூமியான்பேட்டை ஜவகர் நகரைச் சேர்ந்தவர் மேரி பெர்ணான்டஸ், 70. இவர் பென்ஷன் தொகை வாங்குவதற்காக நேற்று காலை திருவள்ளுவர் நகரில் உள்ள கருவூலகத்திற்கு ஆட்டோவில் வந்தார். இறங்கிச் செல்லும் போது, தவறுதலாக தனது கைப்பையை ஆட்டோவிலேயே வைத்துவிட்டுச் சென்றுவிட்டார். கருவூலகத்தின் உள்ளே சென்ற பிறகுதான் கைப்பையை தவறவிட்டது தெரிந்தது. உடனே இது குறித்து அப்பகுதியில் ரோந்துப்பணியில் இருந்து பெரியக்கடை போலீஸ் கான்ஸ்டபிள் ராஜேந்திரனிடம் மேரி தகவல் தெரிவித்தார். ராஜேந்திரன், மேரியை அழைத்துக் கொண்டு, சம்பந்தப்பட்ட ஆட்டோ ஸ்டேண்டிற்கு சென்று, விசாரித்தார். மேரி, தான் பயணம் செய்த ஆட்டோவை அடையாளம் காட்டினார். ஆட்டோவில் பார்த்தபோது, பின் சீட்டில் மேரியின் கைப்பை இருந்தது. கான்ஸ்டபிள் ராஜேந்திரன் கைப்பையை மீட்டு, சீனியர் எஸ்.பி., சந்திரனிடம் ஒப்படைத்தார். கைப்பையில், 7 சவரன் தங்க நகைகள், ரூ.5500 ரொக்கம் இருந்தது. கைப்பையை, சீனியர் எஸ்.பி., சந்திரன் மேரியிடம் ஒப்படைத்தார். தகவல் தெரிவித்தவுடன் விரைவாகச் செயல்பட்டு, கைப்பையை மீட்க உதவிய கான்ஸ்டபிள் ராஜேந்திரனை, சீனியர் எஸ்.பி., பாராட்டினார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us