/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/இன்ஜின் டிரைவருக்கும் பயணிக்கும் தகராறு :புறநகர் மின்சார ரயில்கள் தாமதம்இன்ஜின் டிரைவருக்கும் பயணிக்கும் தகராறு :புறநகர் மின்சார ரயில்கள் தாமதம்
இன்ஜின் டிரைவருக்கும் பயணிக்கும் தகராறு :புறநகர் மின்சார ரயில்கள் தாமதம்
இன்ஜின் டிரைவருக்கும் பயணிக்கும் தகராறு :புறநகர் மின்சார ரயில்கள் தாமதம்
இன்ஜின் டிரைவருக்கும் பயணிக்கும் தகராறு :புறநகர் மின்சார ரயில்கள் தாமதம்
திருவள்ளூர் : பயணிகள் ஏறுவதற்குள் புறநகர் மின்சார ரயிலை கிளப்ப முயன்றதால் ஆத்திரமடைந்த பயணி, ரயில் இன்ஜின் டிரைவரிடம் தகராறில் ஈடுபட்டதால், திருவள்ளூர் - அரக்கோணம் இடையே ரயில்கள் அரை மணி நேரம் காலதாமதமாக இயக்கப்பட்டது.
அப்போது ரயிலை கிளப்புவதற்கான ஹாரன் ஒலி எழுப்பப்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த அப்பயணி இன்ஜின் டிரைவரிடம் சென்று, தகாத வார்த்தைகளால் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து, இன்ஜின் டிரைவர் ரயிலை அங்கிருந்து இயக்க மறுத்து விட்டார். இதில் அப்பயணியுடன் வேறு சில பயணிகளும் சேர்ந்து கொண்டு, டிரைவரிடம் வாக்குவாதம் செய்தனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும், திருவள்ளூர் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். போலீசார் மற்றும் ரயில் நிலைய அதிகாரிகளிடம் இன்ஜின் டிரைவர் ஆனந்தன் கூறும் போது, ''எனக்கு பாதுகாப்பில்லை. பயணிகள் என்னிடம் தகராறு செய்தால் நான் எப்படி ரயிலை இயக்க முடியும்? அப்பயணி மீது நடவடிக்கை எடுத்தால்தான் என்னால் ரயிலை இயக்க முடியும்,'' என தெரிவித்து விட்டார்.
இதை அடுத்து போலீசார் அப்பயணியையும், மனைவி மற்றும் அவரது தாயாரையும் ரயிலை விட்டு இறக்கி, போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். புகார் எதுவும் பெறப்படவில்லை. ரயில் காலதாமதம் குறித்து உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து காலை 10.40 மணிக்கு ரயில் திருவள்ளூரில் இருந்து அரக்கோணம் நோக்கி புறப்பட்டது. இதனால், சென்னையில் இருந்து அரக்கோணம் நோக்கி செல்ல வேண்டிய ரயில்கள் சற்று காலதாமதமாக இயக்கப்பட்டது.


