/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/வாலிபரை கல்லால் தாக்கிய சகோதரர்கள் மூவர் கைதுவாலிபரை கல்லால் தாக்கிய சகோதரர்கள் மூவர் கைது
வாலிபரை கல்லால் தாக்கிய சகோதரர்கள் மூவர் கைது
வாலிபரை கல்லால் தாக்கிய சகோதரர்கள் மூவர் கைது
வாலிபரை கல்லால் தாக்கிய சகோதரர்கள் மூவர் கைது
ADDED : ஆக 03, 2011 01:24 AM
திருவள்ளூர் : பணம் கொடுக்கல், வாங்கலில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை கல்லால் தாக்கிய சகோதரர்கள் மூவரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் அடுத்த, புதுச்சத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் ஸ்ரீதர், 25. இவருக்கும், இவரது உறவினரான கோதண்டன், 25, என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் கோதண்டன், அவரது மனைவி கஸ்தூரி, உறவினர்களான பெரியகுப்பம் ரத்தினம் மகன்கள் விஜயன், 38, யுவராஜ், 30, மற்றும் ராஜா, 28, ஆகியோர் ஸ்ரீதரை வழிமறித்து தகாத வார்த்தைகளால் பேசி கல்லால் தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த ஸ்ரீதர், சிகிச்சைக்கென திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து, திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்கு பதிந்து விஜயன், யுவராஜ், ராஜா ஆகிய மூவரையும் கைது செய்தனர்.