Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/மக்கள் குறைதீர் கூட்டம்: 22 பேருக்கு ரூ.8.96 லட்சம் நிதியுதவி வழங்கல்

மக்கள் குறைதீர் கூட்டம்: 22 பேருக்கு ரூ.8.96 லட்சம் நிதியுதவி வழங்கல்

மக்கள் குறைதீர் கூட்டம்: 22 பேருக்கு ரூ.8.96 லட்சம் நிதியுதவி வழங்கல்

மக்கள் குறைதீர் கூட்டம்: 22 பேருக்கு ரூ.8.96 லட்சம் நிதியுதவி வழங்கல்

ADDED : ஜூலை 27, 2011 01:27 AM


Google News

நாமக்கல்: மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், 22 பயனாளிகளுக்கு மொத்தம், 8 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. கலெக்டர் குமரகுருபரன் தலைமை வகித்தார். கூட்டத்தில், ரேஷன் கார்டு, வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, குடிநீர் வசதி, கல்விக் கடன், பட்டா மாறுதல் உள்ளிட்டவை கேட்டு, 784 மனுக்கள் அளிக்கப்பட்டன. அந்த மனுக்கள் மீது, 15 தினங்களுக்குள் நடவடிக்கை எடுத்து அதன் அறிக்கையை வழங்க வேண்டும் என, கலெக்டர் குமரகுருபரன் உத்தரவிட்டார். கூட்டத்தில், சபரிமலை விபத்தில் பலியான இறையம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்களின் குடும்ப உறுப்பினரான சிட்டாயி என்பவருக்கு நிவாரண உதவியாக, 5 லட்சம் ரூபாய் கேரள அரசால் வழங்கப்பட்டுள்ளது. அதற்கான காசோலையை மாவட்ட கலெக்டர் வழங்கினார். அதுபோல், மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் மூன்று நபர்களுக்கு தீருவுதவித் தொகையாக, 25 ஆயிரம் ரூபாய் உட்பட மாவட்ட கலெக்டர் விருப்ப உரிமை நிதியிலிருந்து, 3 லட்சத்து 31 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில், நான்கு விடுதி காப்பாளர், ஏழு சமையலர்களுக்கும் பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது. மேலும், ஏழு நபர்களுக்கு காதொலிக் கருவி, எட்டு நபர்களுக்கு, 4,500 ரூபாய் மதிப்புள்ள மூன்று சக்கர சைக்கிள், ஐந்து நபர்களுக்கு, 4,300 மதிப்புள்ள மூன்று சக்கர நாற்காலி என மொத்தம், 22 நபர்களுக்கு, 8 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. அனைத்து துறை அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us