ADDED : ஆக 03, 2011 12:52 AM
வேதாரண்யம்: வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை பம்பு ஹவுஸ் அருகே அழுகிய நிலையில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் காணப்பட்டது.
நீள நிறம் கைலி அணிந்திருந்தார். வேறு எந்த அடையாளமும் காண முடியாத அளவுக்கு உடல் அழுகி கிடந்தது. இது குறித்து வி.ஏ.ஓ., சின்னாசாமி வேதாரண்யம் போலீஸில் புகார் செய்தார்.கடந்த சில நாட்களுக்கு முன்பு நாகை அக்கரைப்பேட்டையை சேர்ந்த கணேசன் என்ற மீனவர் கடலில் காணமால் போனார். அவரது உடலாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.இது குறித்து வேதாரண்யம் போலீஸார் விசாரிக்கின்றனர்.


