/உள்ளூர் செய்திகள்/கன்னியாகுமரி/களை கட்டுகிறது பத்மனாபபுரம் அரண்மனை சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்புகளை கட்டுகிறது பத்மனாபபுரம் அரண்மனை சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
களை கட்டுகிறது பத்மனாபபுரம் அரண்மனை சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
களை கட்டுகிறது பத்மனாபபுரம் அரண்மனை சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
களை கட்டுகிறது பத்மனாபபுரம் அரண்மனை சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
ADDED : அக் 07, 2011 02:06 AM
தக்கலை : விடுமுறைகால சீசனை முன்னிட்டு பத்மனாபபுரம் அரண்மனையை காண்பதற்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
ஓய்வின்றி ஊழைக்கும் மக்களுக்கு விடுமுறை நாட்கள் தான் குடும்பத்தோடு இன்பமாக பொழுதை கழிக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது. இஷ்டமான தெய்வங்களை வழிபட செல்வது, சுற்றுலா இடங்களுக்கு போவது என ஒவ்வொருவரின் வாழ்க்கையும் ஆகிபோனது. அந்த வகையில் குமரி மாவட்டத்தில் சிறந்த சுற்றுலா இடமான பத்மனாபபுரம் அரண்மனைக்கு தினமும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். முக்கிய விடுமுறை நாட்களில் அதிகமானோர் குடும்பத்துடன் இங்கு வருகின்றனர். தற்போது காலாண்டு விடுமுறையோடு, ஆயுதபூஜை விடுமுறையும் சேர்ந்து வந்ததால் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணி செய்பவர்கள் அதிகமானோர் அரண்மனையை காண குடும்பத்துடன் வந்து செல்கின்றனர்.
ஆயுதபூஜை தினத்தன்று நான்காயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் அரண்மனையின் அழகை கண்டு ரசித்து சென்றுள்ளனர். இதனால் ஒரு லட்சத்திற்கும் மேல் நுழைவு கட்டணமாக வருவாய் கிடைத்துள்ளது. நேற்றும் காலை முதலே சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்தது. இதே நிலை காலாண்டு விடுமுறை முடியும் வரை இருக்கும். இதனால் இப்பகுதி வியாபாரிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


