/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/மானூர் பஞ்., யூனியனில் இதுவரை 533 பேர் மனுதாக்கல்மானூர் பஞ்., யூனியனில் இதுவரை 533 பேர் மனுதாக்கல்
மானூர் பஞ்., யூனியனில் இதுவரை 533 பேர் மனுதாக்கல்
மானூர் பஞ்., யூனியனில் இதுவரை 533 பேர் மனுதாக்கல்
மானூர் பஞ்., யூனியனில் இதுவரை 533 பேர் மனுதாக்கல்
ADDED : செப் 28, 2011 12:42 AM
திருநெல்வேலி : மானூர் பஞ்., யூனியனில் தேர்தலில் போட்டியிட இதுவரை 533 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
மானூர் பஞ்., யூனியனில் 41 கிராம பஞ்., தலைவர்கள், 21 யூனியன் கவுன்சிலர்கள், 312 கிராம பஞ்., வார்டு உறுப்பினர்கள், 2 மாவட்ட கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். நேற்று யூனியன் கவுன்சிலர் பதவிக்கு 14 பேர், பஞ்., தலைவர் பதவிக்கு 40 பேர், பஞ்., வார்டு உறுப்பினருக்கு 126 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். மானூர் யூனியன் இதுவரை கவுன்சிலர் பதவிக்கு 31 பேரும், பஞ்., தலைவருக்கு 103 பேரும், பஞ்., வார்டு உறுப்பினருக்கு 399 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். யூனியன் முழுவதும் 533 பேர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு இதுவரை யாரும் வேட்புமனு அளிக்கவில்லை.
பணியாளர்களுக்கு பயிற்சிக்கூட்டம்
உள்ளாட்சித்தேர்தல் பணியில் ஈடுபடும் தலைமை அலுவலர், ஓட்டுப்பதிவு அலுவலர்களுக்கு இன்று காலை 11 மணிக்கு மானூர் பஞ்., யூனியன் அலுவலகத்தில் பயிற்சிக்கூட்டம் நடக்கிறது. கூட்டத்தில் தேர்தல் பணியாளர்கள் பங்கேற்க வேண்டும் என யூனியன் பி.டி.ஓ., செல்வராஜ் தெரிவித்தார்.