வார சீட்டு நடத்தி ரூ.1 கோடி மோசடி:கணவன், மனைவி உட்பட மூவர் தலைமறைவு
வார சீட்டு நடத்தி ரூ.1 கோடி மோசடி:கணவன், மனைவி உட்பட மூவர் தலைமறைவு
வார சீட்டு நடத்தி ரூ.1 கோடி மோசடி:கணவன், மனைவி உட்பட மூவர் தலைமறைவு
ADDED : ஆக 23, 2011 05:07 AM
விருதுநகர்:ஸ்ரீவில்லிபுத்தூரில், வார சீட்டு மூலம் பொதுமக்களிடம் பணம் வசூல் செய்து, ஒரு கோடி ரூபாய் ஏமாற்றிய, கணவன், மனைவி உட்பட மூவரை போலீசார் தேடி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்தவர் காளிமுத்து. இவரது மனைவி பத்ரகாளி, மாமனார் சங்கிலியாண்டியுடன் சேர்ந்து, 'திருச்செந்தூர் முருகன் சேமிப்பு குழு' என்ற பெயரில், வார சீட்டு நடத்தி வந்தனர்.
தீபாவளி, பொங்கல் விழாக்களையொட்டி, ஒரு ஆண்டுக்கென, வாரம் 10 ரூபாய் செலுத்தினால், ஆண்டு முடிவில், 50 ரூபாய் வட்டி சேர்த்து, 590 ரூபாய் வழங்குவதாக கூறினர். அதன்படி, பல தெருக்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோரிடம், வாரம் 10 முதல் 2,000 ரூபாய் வரை, ஒரு கோடி ரூபாய் வரை வசூல் செய்தனர்.
ஓராண்டு முடிந்ததும், பணத்தை திருப்பி கேட்ட போது, 'தற்போது பணம் இல்லை; அடுத்த மாதம் தருகிறேன்' எனக் கூறி உள்ளனர். இப்படி பலமுறை கேட்டும் பணம் கிடைக்காததால், 40 பெண்கள் உட்பட 100 பேர், விருதுநகர் எஸ்.பி.,யிடம் நேற்று, புகார் செய்தனர். எஸ்.பி., உத்தரவுப்படி, மூவரை போலீசார் தேடி வருகின்றனர்.


